சென்னையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் கட்டுப்பாட்டில் உள்ள பத்மாவதி தாயார் கோவிலில் 28 -ம் தேதி முதல் பிரமோற்சவ விழா நடைபெற உள்ளது.
சென்னை தி.நகரில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான பத்மாவதி தாயார் கோவில் அமைந்துள்ளது. இதன் கும்பாபிஷேகம் செய்யப்பட்டு ஒரு வருடம் முடிவடைந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து 28 -ம் தேதி முதல் மார்ச் மாதம் 8 -ம் தேதி வரை பிரமோற்சவ விழா நடக்கிறது. முதல் நாளான 28 -ம் தேதி, கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது. அன்று இரவு சின்ன சேஷ வாகனத்திலும், 29 -ம் தேதி பெரிய சேஷ வாகனத்திலும், மார்ச் 1 -ம் தேதி வசிம்ம வாகனத்திலும், 2 -ம் தேதி கல்ப விருஷ வாகனத்திலும், 3 -ம் தேதி யானை வாகனத்திலும் திருவீதி உலா நடைபெறும்.
4 -ம் தேதி கருட வாகனத்திலும், 5 -ம் தேதி சந்திர பிரபை வாகனத்திலும், 6 -ம் தேதி குதிரை வாகனத்திலும், 7-ம் தேதி த்வஜாவ ரோகனத்திலும், 8 -ம் தேதி புஷ்ப வாகத்தில் திருவீதி உலா நடைபெறும். அன்றைய தினம் பிரமோற்சவ விழா நிறைவு பெறுகிறது.