வரும் 2024-ம் ஆண்டு நடைபெற்ற உள்ள மக்களவைத் தேர்தலில், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், பாஜக கூட்டணியில் இணைந்தது.
பிரதமர் மோடி, இன்றும், நாளையும் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இன்று திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் என் மண், என் மக்கள் யாத்திரை நிறைவு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.
மேலும், இன்று நடைபெறும் பா.ஜ.க பொதுக் கூட்டத்திலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இந்த கூட்டத்தில், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொள்கிறார்.
இந்த நிலையில், ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் பாஜக கூட்டணியில் இணைந்தது.
பல்லடத்தில் இன்று நடைபெற உள்ள பிரதமர் மோடியின் பொதுக்கூட்டத்தில், தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஜான் பாண்டியன் பங்கேற்கிறார்.
முன்னதாக, பாஜக தமிழக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன் சந்தித்து, கூட்டணியை உறுதி செய்துள்ளனர்.