நியூசிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் நீல் வாக்னெர் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் தனது ஓய்வை அறிவித்துள்ளார்.
நியூசிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் நீல் வாக்னெர் . இவர் நியூசிலாந்து அணிக்காக 64 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 874 ரன்னும், 260 விக்கெட்டும் வீழ்த்தி உள்ளார்.
பிப்ரவரி 29ஆம் தேதி நியூசிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் வெல்லிங்டனில் தொடங்கியுள்ளது.
இந்த போட்டியில் விளையாடும் வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்ட நிலையில் இதில் நீல் வாக்னெர் அணியில் இடம் பெறவில்லை. இதையடுத்து இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து பேசிய அவர், ” இந்த முடிவு எளிதானது அல்ல. அது உணர்ச்சிமிக்கது. ஆனால் முன்னேற இதுவே சரியான நேரம். பிளாக் கேப்ஸிற்காக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் ஒவ்வொரு தருணத்தையும் நான் ரசித்துள்ளேன்.
மேலும் ஒரு அணியாக எங்களால் சாதிக்க முடிந்த அனைத்திலும் பெருமைப்படுகிறேன். எனது வாழ்க்கையில் கட்டமைக்கப்பட்ட நட்பு மற்றும் பிணைப்புகளை நான் மிகவும் மதிக்கிறேன். இன்று நான் இருக்கும் இடத்தில் பங்கு வகித்த அனைவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன் ” என கூறினார்.