பாரத பிரதமர் நரேந்திர மோடி திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்திற்கு சென்று பார்வையிட்டார்.
பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் கேரளா, தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
மேலும் அவர் ரூ.24,000 கோடி மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு வைக்கவுள்ளார். இந்நிலையில் இன்று கேரளாவிற்கு சென்ற பிரதமர் திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்திற்கு சென்றார்.
அவருடன் கேரள முதல்வர் பினராயி விஜயன், MoS முரளீதரன் மற்றும் இஸ்ரோ தலைவர் சோமநாத் ஆகியோர் சென்றனர்.
அந்த விண்வெளி மையத்திற்கு சென்ற பிரதமர் அங்கு உள்ள கண்டுபிடிப்புகளை பார்வையிட்டார். இஸ்ரோ தலைவர் சோம்நாத் பாரத பிரதமருக்கு அங்கிருந்த கண்டுபிடிப்புகள் குறித்த விளக்கங்களை கூறி வந்தார்.
மேலும் அவர் அங்கிருந்த ஊழியர்களுடன் பேசினார். பின்னர் இஸ்ரோ தலைவர் பாரத பிரதமருக்கு நினைவு பரிசை வழங்கி கௌரவித்தார்.