ஹிந்தி பிக் பாஸ் சீசன் 16 போட்டியாளர் அப்து ரோசிக்கிடம் பணமோசடி வழக்கில் அமலாக்க துறையினர் (ED) விசாரணை நடத்தினர்.
அலியாஸ்கர் ஷிராசி மற்றும் பிறருடன் தொடர்புடையதாகக் கூறப்படும் போதைப்பொருள் சிண்டிகேட்டை பற்றி அமலாக்க துறையினர் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணை சுமார் 3 மணி நேரம் நடைபெற்றது. போதைப்பொருள் கடத்தல்காரராகக் கூறப்படும் அலியாஸ்கர் ஷிராசி, கடந்த ஆண்டு மார்ச் மாதம் மும்பை போலீஸாரால் ₹7.87 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.
இது தொடர்பான பணமோசடிக்காக ஜனவரி 5 ஆம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். ஷிராசியுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் ஆலோசனை நிறுவனத்துடனான தொடர்பு காரணமாக அப்து ரோசிக் அமலாக்கத்துறையின் கவனத்திற்கு வந்தார்.
பிராண்ட் அம்பாசிடர் பதவிக்காக ரோசிக் எந்தப் பணமும் பெறவில்லை என்றும், ED இன் விசாரணையில் அவர் எந்தப் பங்கையும் வகிக்கவில்லை என்றும் அவரது வழக்கறிஞர் பிரசாந்த் பாட்டீல் குறிப்பிட்டார்.
கடந்த மார்ச் மாதம் 15.74 கிலோ கெட்டமைன் மற்றும் ₹58.31 லட்சம் மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட போதைப்பொருளை மும்பை போலீசார் கைப்பற்றியதன் அடிப்படையில் ஷிராசிக்கு எதிரான ED இன் விசாரணை அமைந்துள்ளது.
ஷிராசி தலைமையிலான சிண்டிகேட், சட்டவிரோத போதைப்பொருள் விநியோகத்திற்காக ஆய்வுக்கு உட்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளுடன் தொடர்புடைய தனிநபர்கள் சம்பந்தப்பட்ட பரிவர்த்தனைகளை அமலாக்கத்துறை ஆராய்கிறது.