கூட்டணி தொடர்பாக பேச்சுவார்ததை நடத்த தமிழக பாஜக சார்பில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தல் அடுத்த சில மாதங்களில் நடைபெறவுள்ளது. இதனையடுத்து கூட்டணி, தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த தமிழக பாஜக சார்பில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா அனுமதியுடன் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் தமிழக அரசியல் கட்சிகளுடன் கலந்தாலோசனை நடத்திடவும். ஒருங்கிணைத்திடவும் மாநில அளவில் குழு அமைக்கப்படுகிறது.
அதில், மததிய இணை அமைச்சர் எல்.முருகன், தேசிய செயலாளரும், தமிழக தேர்தல் பொறுப்பாளருமான அரவிந்த மேனன், பாஜக தமிழக தேசிய இணைப் பொறுப்பாளர் டாக்டர் பி. சுதாகர் ரெட்டி, சட்டமன்ற பாஜக குழு தலைவர் நயினார் நாகேந்திரன், தேசிய செயற்குழு உறுப்பினர் பொன்.ராதாகிருஷ்ணன்,தேசிய செயற்குழு உறுப்பினர் H. ராஜா, தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.