மக்களவை தேர்தலில் முதன் முறை வாக்காளர்களிடம் பிரச்சாரம் செய்ய வேண்டும் என அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் தேசிய பொதுச்செயலர் யாக்ஞவல்க்ய சுக்லா கேட்டுக்கொண்டுள்ளார்.
அடுத்த ஓரிரு மாதங்களில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், ஆர்எஸ்எஸ் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. தேசிய செயலாக்க கூட்டம் பிப்ரவரி 27 மற்றும் 28ஆம் தேதிகளில் புதுச்சேரியில் நடைபெற்றது. இதில் ஏ.பி.வி.பி., தேசிய பொதுச்செயலர் யாக்ஞவல்க்ய சுக்லா பங்கேற்று மக்களவை தேர்தல் பிரச்சார யுத்திகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
அப்போது பேசிய, தேர்தல் முடிவுகளை தீர்மானிப்பதில் முதல்முறை வாக்காளர்களின் பங்கு முக்கியமானது என்றும், எனவே முதல் முறை வாக்காளர்களிட்ம் வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்து, பிரசார இயக்கத்தை நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
கட்சி, தனி நபர்கள் நலன்களை தாண்டி, நாட்டின் நலனுக்கு முக்கியத்துவம் அளித்து ஓட்டளிக்க வேண்டும் என்றும், தொகுதிவாரியாக கலந்துரையாடல் கூட்டங்களை நடத்தவும் ஏ.பி.வி.பி. முடிவு செய்துள்ளது.