இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் தனது நிலையை வலுப்படுத்தும் நோக்கில், இந்தியக் கடற்படை, இலட்சத்தீவின் மினிகாய் தீவுகளில் ஐஎன்எஸ் ஜடாயு என்ற புதிய தளத்தை இயக்க உள்ளது. .
ஐஎன்எஸ் விக்ரமாதித்யா மற்றும் ஐஎன்எஸ் விக்ராந்த் உள்ளிட்ட இரட்டை விமானம் தாங்கி போர்க்கப்பல்களில் இந்திய கடற்படை தனது தளபதிகள் மாநாட்டை நடத்துகிறது. அங்கு அவர்கள் ஒரு கேரியரில் இருந்து புறப்பட்டு மற்றொன்றில் தரையிறங்குவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்.
கொச்சியில் மல்டிரோல் ஹெலிகாப்டர் எம்எச்-60 ரோமியோவை முதல் முறையாக இந்திய கடற்படை இயக்க உள்ளது.கோவாவில் உள்ள அதன் கடற்படைப் போர்க் கல்லூரியின் கட்டிடங்கள் மற்றும் கார்வாரில் உள்ள வசதிகள் மார்ச் 4 ஆம் தேதி திறக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது மாலத்தீவில் இருந்து 50 மைல் தொலைவில் உள்ளதால், அப்பகுதியில் உள்ள எதிரிகளின் இராணுவ மற்றும் வணிக நடவடிக்கைகளைக் கண்காணிக்கவும், அப்பகுதியில் காலூண்டறவும் உதவும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த தளம் அந்தமானில் உருவாக்கப்பட்ட ஐஎன்எஸ் பாஸைப் போலவே இருக்கும் என்றும், அதே திறன்களைக் கொண்டிருக்கும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் அமெரிக்காவில் வாங்கப்பட்ட நான்கு எம்எச்-60 ரோமியோ மல்டிரோல் ஹெலிகாப்டர்களையும் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தியக் கடற்படை முதன்முறையாக லட்சத்தீவுக்கு அருகிலுள்ள பகுதிகளில் இரட்டைக் கப்பலின் செயல்பாடுகளை நிரூபிக்கப் போகிறது. ஐஎன்எஸ் விக்ராந்த் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, கடற்படை இரண்டு விமானம் தாங்கிக் கப்பல்களின் செயல்பாடுகளை ஒன்றாகச் செய்வது இதுவே முதல் முறையாகும்.
விசாகப்பட்டினத்தில் நடந்த மிலின் என்ற பயிற்சியில், உலக ராணுவத்தினருக்காக விமானம் தாங்கி போர்க்கப்பல்களை தயாரிக்கும் இந்தியாவின் திறனை வெளிப்படுத்தும் வகையில் இரண்டு கேரியர்களும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.