குடியரசுத் தலைவர் மாளிகையிலுள்ள அமிர்த தோட்டத்தை பார்வையாளர்கள் மாலை 6.00 மணி வரை பார்வையிடலாம் என்று குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதன்படி அமிர்த தோட்ட விழா 1-இன் கீழ், வரும் 31-ஆம் தேதி வரை, பொதுமக்கள் பார்வைக்காக அமிர்த தோட்டம் திறந்திருக்கும்.
திங்கட்கிழமை தவிர வாரத்தில் ஆறு நாட்களும் காலை 10.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை (கடைசி நுழைவு – மாலை 05.00 மணி) மக்கள் தோட்டத்துக்குச் செல்லலாம்.
முன்னதாக, காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை (கடைசி நுழைவு – மாலை 4.00 மணி) மட்டுமே பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டனர்.
அமிர்த தோட்டத்தை பார்வையிட https://visit.rashtrapatibhavan.gov.in/visit/amrit-udyan/rE என்ற இணையதள இணைப்பில் பார்வையாளர்கள் முன்பதிவு செய்யலாம். பார்வையாளர்கள் அதற்கான கவுண்டர்கள் அல்லது குடியரசுத் தலைவர் மாளிகை நுழைவாயில் எண் 12-க்கு அருகிலுள்ள சுய சேவை வசதியில் பதிவு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.