பரவுனியில் இந்துஸ்தான் உரக் மற்றும் ரசாயன நிறுவன (HURL) உரத் தொழிற்சாலையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் மோடி,
இன்று நிறைவேற்றப்படும் வாக்குறுதி, பரவுனி உரத் தொழிற்சாலை தொடங்கப்படுவதை பிரதமர் மோடி எடுத்துரைத்தார். பீகார் விவசாயிகள் உட்பட நாட்டின் விவசாயிகளுக்கு இது ஒரு பெரிய வரப்பிரசாதம் என்று அவர் கூறினார்.
வேலை வாய்ப்புகளை அதிகரிப்பதற்கு அரசு முன்னுரிமை அளிப்பதை சுட்டிக்காட்டிய பிரதமர், எரிசக்தி, உரங்கள் மற்றும் போக்குவரத்து இணைப்பு ஆகியவை வளர்ச்சியின் அடிப்படை என்றார்.
இந்துஸ்தான் உர்வாரக் மற்றும் ரசாயன நிறுவன (HURL) உர ஆலை பரவுனியில் ரூ. 9500 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்டது, இந்த ஆலை விவசாயிகளுக்கு மலிவு விலையில் யூரியாவை வழங்குவதோடு அவர்களின் உற்பத்தித்திறன் மற்றும் நிதி ஸ்திரத்தன்மையை அதிகரிக்க வழிவகுக்கும். நாட்டில் புத்துயிர் பெறும் நான்காவது உரத் தொழிற்சாலை இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.