பிரதமர் மோடி ஆட்சியில் ரூ.12,000 கோடி மதிப்பிலான போதைப்பொருள்கள் அழிப்பு - அமித் ஷா
Mar 19, 2026, 02:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் மோடி ஆட்சியில் ரூ.12,000 கோடி மதிப்பிலான போதைப்பொருள்கள் அழிப்பு – அமித் ஷா

Murugesan M by Murugesan M
Mar 3, 2024, 07:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

போதைப்பொருள்களைக் கண்டறிதல், போதைப் பொருள்களை அழித்தல் மற்றும் குற்றவாளிகளைக் கைது செய்தல் ஆகியவற்றின் மூலம் போதைப் பொருள்கள் இல்லாத இலக்கை அடைய நாடு வேகமாக செயலாற்றுகிறது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் அச்சுறுத்தலைக் கையாள்வதில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் வெற்றி குறித்து மூன்று வீடியோக்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

The Modi government's ruthless approach towards narco-trade has borne effective results. The upshot of this approach is the drastic rise in the number of arrests and seizures. #DrugsFreeBharat pic.twitter.com/JE9RSrPcDV

— Amit Shah (@AmitShah) March 3, 2024

“போதைப்பொருள் தடுப்பில் குறித்த பிரதமர்  நரேந்திர மோடி தலைமையிலான அரசின் சமரசமற்ற  அணுகுமுறை சிறந்த முடிவுகளை அளித்துள்ளது என்று கூறியுள்ளார்.  இந்த அணுகுமுறையின் விளைவு கைது நடவடிக்கைகள் மற்றும் பறிமுதல் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

போதைப் பொருள் இல்லாத பாரதம் என்பது நமது எதிர்கால சந்ததியினருக்கு மிகப்பெரிய பரிசு என்று அவர் கூறியுள்ளார்.  போதைப்பொருள்களைக் கண்டறிதல், போதைப்பொருள் கும்பலை கண்டறிந்து குற்றவாளிகளை கைது செய்வது ஆகியவற்றின் மூலம் இந்த இலக்கை அடையும் நோக்கில் நாடு வேகமாக முன்னேறி வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2006 முதல் 2013-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 1257 ஆகும். இது 2014-2023 ஆம் ஆண்டில் 3 மடங்கு அதிகரித்து 3755 ஆக உயர்ந்துள்ளது.

2006-13 காலகட்டத்தில் 1363 ஆக இருந்த கைதுகளின் எண்ணிக்கை 2014-23 காலகட்டத்தில் 5745 ஆக 4 மடங்கு அதிகரித்துள்ளது. 2006 முதல் 2013 வரை 1.52 லட்சம் கிலோவாக இருந்த போதைப்பொருட்களின் பறிமுதல் அளவு பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் இரு மடங்காக 3.95 லட்சம் கிலோவாக அதிகரித்துள்ளது.

2006-13 காலகட்டத்தில் ரூ.768 கோடியாக இருந்த பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் 30 மடங்கு உயர்ந்து ரூ.22,000 கோடியாக உயர்ந்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் ரூ.12,000 கோடி மதிப்புள்ள 12 லட்சம் கிலோ போதைப் பொருட்களை போதைப்பொருள் தடுப்பு அமைப்புகள் அழித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Amith sha
ShareTweetSendShare
Previous Post

10 நாட்கள், 12 மாநிலங்கள், 29 நிகழ்ச்சிகள் : பிரதமர் மோடியின் பயண விவரம்!

Next Post

ராஜினாமா செய்வதாக அறிவித்த நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாயா!

Related News

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

தமிழகத்தில் சாலை அமைக்காமல் ரூ. 600 கோடி அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார்!

சேலம் மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்தில் 2,604 செல்போன்கள் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

சங்கரன்கோவில், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை!

மாற்றுத் திறனாளிகளுக்கு 7 % இடஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டுவர உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் தீப வழக்கை நானே விசாரிப்பேன் – நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்

ஈரான் போர் யுக்தியால் கவரப்பட்ட இந்தியா : ட்ரோன் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த முடிவு – சிறப்பு கட்டுரை!

நாடு முழுவதும் 100 தொழிற் பூங்கா அமைக்க 33, 660 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

உலக தண்ணீர் தினம் – காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் திருச்சியில் வரும் 22 ஆம் தேதி கருத்தரங்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies