10 நாட்கள், 12 மாநிலங்கள், 29 நிகழ்ச்சிகள் : பிரதமர் மோடியின் பயண விவரம்!
Oct 28, 2026, 06:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

10 நாட்கள், 12 மாநிலங்கள், 29 நிகழ்ச்சிகள் : பிரதமர் மோடியின் பயண விவரம்!

Murugesan M by Murugesan M
Mar 3, 2024, 07:17 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பிரதமர் நரேந்திர மோடி அடுத்த 10 நாட்களில், பன்னிரண்டு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 29 நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

மார்ச் 4ஆம் தேதி தெலுங்கானா மாநிலம் அடிலாபாத்தில் நடைபெறும் விழாவில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் பிரதமர் மோடி, அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.

பின்னர் தமிழகம் செல்லும் பிரதமர், கல்பாக்கம் அணுமின் நிலையத்தில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரூ.400 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள விரைவு எரி பொருள் மறுசுழற்சி உலையை தொடங்கி வைக்கிறார்.

பின்னர் சென்னையில் நடைபெறும் பாஜக கூட்டத்தில் பங்கேற்று மீண்டும் ஹைதராபாத் செல்கிறார். மார்ச் 5 ஆம் தேதி, சங்கரெட்டியில் பல வளர்ச்சித் திட்டங்கள் அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார். அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் அவர் பேசுகிறார்.

தெலுங்கானாவில் இருந்து, ஒடிசா செல்லும் பிரதமர் மோடி, ஜாஜ்பூரில் உள்ள சண்டிகோலேயில் பல வளர்ச்சித் திட்டங்கங்களை தொடங்கி வைக்கிறார். பின்னர் சண்டிகோலேயில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். பின்னர் அங்கிருந்து அவர் மேற்கு வங்கம் செல்கிறார்.

மார்ச் 6-ம் தேதி கொல்கத்தாவில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், நிறைவடைந்த பணிகளை பிரதமர் தொடங்கி வைக்கிறார். பின்னர் பராசத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் உரையாற்றுகிறார்.அங்கிருந்த பீகார் செல்லும் பிரதமர் மோடி, பெட்டியாவில் பல வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைக்கிறார்.

மார்ச் 7 ஆம் தேதி,ஜம்மு காஷ்மீர் செல்லும் பிரதமர் மோடி, ஸ்ரீநகரில் பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார்.மார்ச் 8 ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் முதல் தேசிய படைப்பாளி விருது வழங்கும் நிகழ்வில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

மார்ச் 9ஆம் தேதி, மேற்கு கமெங்கில் உள்ள சேலா சுரங்கப்பாதையைத் திறந்து வைப்பதற்காக பிரதமர் அருணாச்சலப் பிரதேசத்துக்குச் செல்கிறார். அப்போது, இட்டாநகரில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

அருணாச்சல பிரதேசத்தில் இருந்து, அஸ்ஸாம் செல்லும் பிரதமர், அங்கு ஜோர்ஹாட்டில் உள்ள லச்சித் பர்புகான் சிலையை திறந்து வைக்கிறார்.அதன்பிறகு, ஜோர்ஹாட்டில் பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

பின்னர், மேற்கு வங்க மாநிலம் சிலிகுரி செல்லும் பிரதமர், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார். அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் அவர் பேசுகிறார். மார்ச் 10 ஆம் தேதி, உத்தரபிரதேசம் செல்லும் பிரதமர் மோடி, பல்வேறு திட்டங்களை நாட்டுககு அர்ப்பணிக்கிறார்.

மார்ச் 11 துவாரகா விரைவுச்சாலை திறப்பு விழா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். மாலையில் டிஆர்டிஓ நிகழ்ச்சியில் பிரதமர் கலந்து கொள்கிறார். மார்ச் 12 ஆம் தேதி, பிரதமர் மோடி குஜராத்தின் சபர்மதிக்கு விஜயம் செய்கிறார். பின்னர் அவர் ராஜஸ்தான் செல்கிறார். ஜெய்சால்மர் மாவட்டத்தில் உள்ள பொக்ரானில் அவர் சுற்றுப்பயணம் செய்கிறார்.

மார்ச் 13 ஆம் தேதி , பிரதமர் குஜராத் மற்றும் அஸ்ஸாமில் மூன்று குறைக்கடத்தி திட்டங்களுக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் அடிக்கல் நாட்டுகிறார்.

Tags: PM Modi10day visitpm modi tour programme
Share
Tweet
SendShare
Previous Post

மாமல்லபுரம்: ராட்சத அலையில் சிக்கி 4 மாணவர்கள் பலி!

Next Post

பிரதமர் மோடி ஆட்சியில் ரூ.12,000 கோடி மதிப்பிலான போதைப்பொருள்கள் அழிப்பு – அமித் ஷா

Related News

அருணாச்சலபிரதேசத்தில் சீனா கட்டவுள்ள பிரமாண்ட அணைக்கு Gen Z இளைஞர்கள் எதிர்ப்பு – பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் மோதி விபத்து;46 பேர் உயிரிழப்பு

21% லாபம் சம்பாதித்த முதலீட்டாளர்கள்; ஜியோ IPO வாங்கியவர்களுக்கு அடித்த ஜாக்பாட்

அரிசி விலையை கட்டுப்படுத்த ஆந்திராவில் இருந்து நெல் மூட்டைகள் கொண்டு வர அனுமதி – அமைச்சர்கள் செங்கோட்டையன், வெங்கட்ரமணன் தகவல்!

சென்னை எண்ணூரில் கடல் சீற்றம் – சாலையில் சீறிப் பாய்ந்த நீர்!

அன்பில் மகேஷ் கைதின் போது போலீசாருடன் வாக்குவாதம் – சேகர்பாபு மீது வழக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

ரயிலில் பட்டாசு எடுத்து சென்றால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை : ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை!

இன்றைய தங்கம் விலை!

கோயிலுக்குள் யாரை அனுமதிக்கலாம் – உயர் நீதிமன்ற மதுரை கிளை விளக்கம்!

மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலைக்கும், கொள்முதல் விலைக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பது ஏன்? – உச்ச நீதிமன்றம் கேள்வி!

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி வெளிநாடு செல்லும் உரிமையை மறுக்கக் கூடாது – உயர் நீதிமன்றம்

அதிக மின் கட்டணம் விதிப்பு – சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் ஆட்டோ கட்டணம் உயர்வு!

காவிரியில் உரிய நீரை கர்நாடகா திறக்கவில்லை – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர மனுத்தாக்கல்!

ஆந்திராவில் கரையை கடக்க தொடங்கியது அர்னாப் புயல் – மணிக்கு 125 முதல் 135 கி.மீ வேகத்தில் பலத்த காற்று!

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies