பெங்களூரு ராமேஸ்வரம் ஹோட்டல் குண்டுவெடிப்பு விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்பிடம் (என்ஐஏ) மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்படைத்துள்ளது. இதனையடுதுத என்ஐஏ அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
பெங்களூரு ஒயிட்ஃபீல்ட் பகுதியில் உள்ள ராமேஸ்வரம் உணவகத்தில் மார்ச் 1 ஆம் தேதி குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது. இதில் 10 பேர் காயம் அடைந்தனர். இதுதொடர்பாக பெங்களூரூ போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அதேநேரத்தில் என்ஐஏ அதிகாரிகளும் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர்.
அங்கு பதிவான சிசிடிவி காட்சியில் மர்ம நபர் ஒருவர் உணவு அருந்திவிட்டு கை கழுவும் இடத்தில் பை ஒன்றை வைத்து செல்வதும், அவர் சென்ற பின் குண்டு வெடித்ததும் அதில் பதிவாகியுள்ளது. இதனையடுத்து அவரை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணைக்கு மாற்றி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து என்ஐஏ அதிகாரிகள் மீண்டும் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.