பாரத பிரதமர் நரேந்திர மோடி வருகையையொட்டி, சென்னையில் டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை நந்தனம், YMCA மைதானத்தில் நடைபெற உள்ள “தாமரை மாநாடு” பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகிறார். பாரத பிரதமர் நரேந்திர வருகையையொட்டி, முக்கிய பகுதிகளில் ஐந்தடுக்கு பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, பிரதமர் நரேந்திர மோடி வருகை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர், உத்தரவின்பேரில், பிரிவு 144-ன் கீழ், சென்னை பெருநகரில், டிரோன்கள் (Drones) மற்றும் இதர ஆளில்லா விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தடையை மீறி பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை பெருநகர காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுத்துள்ளது.