பிரதமர்மோடியின் துணிச்சலான மற்றும் தொலைநோக்குத் தலைமைக்கு, தமிழக ஆளுநர் ஆர். என். ரவி நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
“நமது அணு விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள்! இன்று பாரதம் தொழில்நுட்ப முன்னேற்றத்திலும் எரிசக்தியிலும் தன்னிறைவைப் பெற்று மற்றுமொரு வரலாற்றுபூர்வ மைல்கல்லை எட்டியுள்ளது, பிரதமர் நரேந்திர மோடி கல்பாக்கத்தில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 500 மெகாவாட் விரைவு ஈனுலை மைய செயல்பாட்டைத் தொடங்கி வைத்தார்.
“நமது அணு விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள்! இன்று பாரதம் தொழில்நுட்ப முன்னேற்றத்திலும் எரிசக்தியிலும் தன்னிறைவைப் பெற்று மற்றுமொரு வரலாற்றுபூர்வ மைல்கல்லை எட்டியுள்ளது, மாண்புமிகு பிரதமர் @narendramodi கல்பாக்கத்தில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 500 மெகாவாட் விரைவு ஈனுலை மைய… pic.twitter.com/GUNP3MkbJN
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) March 4, 2024
நமது அணு விஞ்ஞானிகளின் இந்த புரட்சிகரமான தொழில்நுட்ப முன்னேற்றம் பாரதத்தை மீண்டும் பெருமையடையச் செய்துள்ளதுடன் இந்த வசதியைப் பெற்ற உலகின் இரண்டாவது நாடு என்ற பெருமையையும் பெற்றுத் தந்துள்ளது.
இதற்கு வித்திட்ட #பிரதமர்மோடியின் துணிச்சலான மற்றும் தொலைநோக்குத் தலைமைக்கு நன்றி. தேசம் தன்னம்பிக்கையுடன் #அமிர்தகாலத்தில் முழுமையாக வளர்ச்சியடைந்த பாரதம் ஆகும் நம்பிக்கையுடன் முன்னோக்கிச் செல்கிறது” எனத் தெரிவித்தார்.