புத்தரின் இலட்சியங்கள் இந்தியாவிற்கும் தாய்லாந்திற்கும் இடையே ஆன்மீக பாலமாக செயல்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் பதிவி ஒன்றை விடுத்துள்ளார். அதில், புத்தபெருமானின் இலட்சியங்கள் இந்தியாவிற்கும் தாய்லாந்திற்கும் இடையே ஒரு ஆன்மீக பாலமாக செயல்படுகின்றன. ஆழமான வேரூன்றிய தொடர்பை வளர்க்கின்றன.
பக்தர்கள் ஆன்மீக ரீதியில் செழுமையான அனுபவத்தைப் பெற்றதில் மகிழ்ச்சியடைகிறேன். வரும் நாட்களில் நினைவுச்சின்னங்கள் பிரதிஷ்டை செய்யப்படும் சியாங் மாய், உபோன் ரட்சதானி மற்றும் கிராபி ஆகிய இடங்களில் பக்தர்கள் தரிசனம் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
The ideals of Lord Buddha serve as a spiritual bridge between India and Thailand, fostering a deep-rooted connection. I am glad the devotees had a spiritually rich experience and I urge devotees to pay obeisance at Chiang Mai, Ubon Ratchathani, and Krabi, where the relics will be… https://t.co/RbMMheTnjN
— Narendra Modi (@narendramodi) March 5, 2024