ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் வங்கதேசத்துக்கு 64 ஆயிரத்து 400 டன் வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
வங்கதேசத்திற்கு 50 ஆயிரம் டன் வெங்காயமும், ஐக்கிய அரபு எமிரேட்ஸிக்கு 14 ஆயிரத்து 400 டன் வெங்காயமும் தேசிய கூட்டுறவு ஏற்றுமதி லிமிடெட் மூலம் அனுமதிக்கப்படுகிறது.
30 ஆயிரம் மெட்ரிக் டன் பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசியை தான்சானியாவிற்கும், 80 ஆயிரம் டன் உடைந்த அரிசியை ஜிபூட்டி மற்றும் கினியா பிசாவுக்கும் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதித்துள்ளது.
உள்நாட்டில் வெங்காயம் கிடைப்பதை அதிகரிக்கவும், விலையை கட்டுக்குள் வைத்திருக்கவும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல், இந்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.