கருக்கலைப்பை அரசியலமைப்பு உரிமையாக்கிய பிரான்ஸ்!
Jul 29, 2026, 04:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கருக்கலைப்பை அரசியலமைப்பு உரிமையாக்கிய பிரான்ஸ்!

Murugesan M by Murugesan M
Mar 5, 2024, 10:53 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரான்ஸ் நாட்டில் கருக்கலைப்பை பெண்களின் அரசியலமைப்பு உரிமையாக அங்கீகரிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசியலமைப்பில் கருக்கலைப்பு உரிமைகளை வெளிப்படையாக பதிவு செய்த முதல் நாடு என்ற பெருமையை பிரான்ஸ் பெற்றுள்ளது.

பிரான்ஸ் நாட்டில் நேற்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்றது. அதில் கருக்கலைப்பை பெண்களின் அரசியலமைப்பு உரிமையாக்கும் மசோதாவை அதிபர் இமானுவேல் மேக்ரான் தாக்கல் செய்தார்.

இதையடுத்து நடைபெற்ற வாக்கெடுப்பில் அவையில் இருந்த மொத்த உறுப்பினர்களில், 780 பேர் மசோதாவிற்கு ஆதரவாகவும், 72 பேர் எதிராகவும் வாக்களித்தனர்.

அமெரிக்காவில் நடைபெற்ற கருக்கலைப்பு உரிமைகள் திரும்பப் பெறப்பட்டது போன்ற நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், உலகில் கருக்கலைப்பை பெண்களின் அரசியலமைப்பு உரிமையாக்கிய முதல் நாடு என்ற பெருமையை பிரான்ஸ் பெற்றுள்ளது. இந்த நடவடிக்கை ஆனது, பிரான்சின் பெருமை மற்றும் உலக நாடுகளுக்கான செய்தி என இமானுவேல் மேக்ரான் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இதனிடையே மத்திய பாரிஸில் கூடியிருந்த கருக்கலைப்பு உரிமை ஆர்வலர்கள் இந்த சட்டத்தை உற்சாகமாக வரவேற்றனர். நாடாளுமன்றத்தின் வாக்களிப்பின் முடிவு மாபெரும் திரையில் அறிவிக்கப்பட்டபோது “MyBodyMyChoice” என்ற செய்தியைக் காட்டியதும் அவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

பிரான்ஸ் இயற்றியுள்ள புதிய சட்டத்தின்படி, குறைந்தபட்சம் முதல் 14 வார கர்ப்பகாலத்தில் அரசு நிதியுதவியுடன் கருக்கலைப்புகளை அனுமதிக்கிறது. பெற்றோரின் அனுமதியின்றி சிறார்களும் இந்த அம்சத்தை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் உள்ளது.

பிரான்சில் கடந்த 1975ம் ஆண்டு முதல் கருக்கலைப்பு சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்படுகிறது. இந்நிலையில் தான் 1958ம் ஆண்டு உருவாக்கப்பட்ட அந்நாட்டின் அரசியலமைப்பில் உள்ள, பெண்கள் சுதந்திரம் தொடர்பான பிரிவை மறுபரிசீலனை செய்ய நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் நேற்று நடைபெற்றது.

அதில், கருக்கலைப்பு மசோதாவிற்கு ஒப்புதல் கிடைத்த நிலையில், நவீன பிரான்சின் அரசியலமைப்பு சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட 25 வது திருத்தம் இதுவாகும். 2008ம் ஆண்டிற்குப் பிறகு அந்நாட்டு அரசியலமைப்பில் மேற்கொள்ளப்படும் முதல் திருத்தம் இதுவாகும்.

இதனை கொண்டாடும் விதமாக பாரிஸில் உள்ள ஈஃபிள் டவரில் “மை பாடி மை சாய்ஸ்” என்ற வாசகம் வண்ண விளக்குகளால் ஒளிரூட்டப்பட்டு கொண்டாடப்பட்டது.

Tags: France made abortion a constitutional right!
ShareTweetSendShare
Previous Post

பிஜு பட்நாயக் தலைமை பல தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கும் : பிரதமர் மோடி

Next Post

ஐக்கிய அரபு எமிரேட்ஸ், வங்கதேசத்திற்கு 64 ஆயிரத்து 400 டன் வெங்காயம் ஏற்றுமதி!

Related News

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies