திருச்சி விமான நிலையத்தில் ஜீன்ஸ் பேண்டில் தங்கம் கடத்திய நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு ஷார்ஜா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து விமானங்கள் வந்து செல்கின்றன.
இந்த நிலையில், ஷார்ஜாவில் இருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணம் செய்யும் பயணி ஒருவர் தங்கம் கடத்தி வருவதாக, சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், பயணிகளை விமான நிலையத்தில், சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது, பயணி ஒருவர் தனது ஜீன்ஸ் பேண்டின் பின்பக்கம் முட்டிக்குக் கீழ் பகுதியில் தங்கத்தை ஸ்ப்ரே செய்து கடத்தி எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கடத்தலில் ஈடுபட்ட அந்த பயணியைக் கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரிடமிருந்து ரூபாய் 24 லட்சத்து 96 ஆயிரம் மதிப்புள்ள 390 கிராம் தங்கத்தைப் பறிமுதல் செய்தனர். அந்த நபரிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.