தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் உதவியாளர் மற்றும் உதவி பிரிவு அலுவலர் பணிக்கான தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தொகுதி V-A தேர்வு கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 18-ம் தேதி நடைபெற்றது.
தேர்வு நடைபெற்று, 15 மாதங்களாகியும் தேர்ச்சி பெற்றவர்களின் இறுதிப் பட்டியல் வெளியிடவில்லை. இதனால், தலைமைச் செயலகப் பணிக்கான தேர்வு எழுதிய தேர்வர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார்கள்.
அப்போது, தமிழ்நாடு அரசுப் பனியாளர் தேர்வாணையத்தின் அலட்சியமே காரணம் எனப் பல்வேறு அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்தன.
இதனையடுத்து, எட்டு மாதங்களுக்குப் பின்னர் 2023 -ம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி முடிவுகள் வெளியிட்டனர். இதைத்தொடர்ந்து அக்டோபர் 14-ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு இணையவழியில் நடைபெற்றது.
ஆனால், சான்றிதழ் சரிபார்ப்பு முடிவடைந்து 5 மாதங்களாகிவிட்டது. இன்னும் இறுதிப் பட்டியல் தயாரிக்கவில்லை.
தேர்வு எழுதிவிட்டு, சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்துவிட்ட நிலையில், தங்களை தமிழக அரசு அலைகழித்து வருவதாகப் பாதிக்கப்பட்டுள்ள நபர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.