குடியரசுத் துணைத் தலைவர் தன்கர் மார்ச் 8-ம் தேதி தமிழகம் வருகிறார்.
குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், கர்நாடகா மாநிலம் பெங்களூரு, கேரள மாநிலம் திருவனந்தபுரம், தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் ஆகிய இடங்களுக்கு மார்ச் 8-ம் தேதி பயணம் மேற்கொள்கிறார்.
தமது ஒரு நாள் பயணத்தின் போது, குடியரசுத் துணைத் தலைவர் பெங்களூருவில் உள்ள இஸ்ரோ செயற்கைக்கோள் ஒருங்கிணைப்பு மற்றும் சோதனை நிறுவனத்திற்குச் சென்று, இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) அறிவியல் சமூகத்தினருடன் கலந்துரையாடுகிறார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெறும் விருது வழங்கும் விழாவில், தன்கர் தலைமை விருந்தினராக கலந்து கொள்கிறார்.
மகாசிவராத்திரி கொண்டாட்டங்களில் பங்கேற்க, கோயம்புத்தூரில் உள்ள ஈஷா யோகா மையத்திற்கும் குடியரசுத் துணைத் தலைவர் தனகர் செல்கிறார்.