உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் தற்போது சிறையில் உள்ள சமாஜ்வாதி கட்சி எம்எல்ஏ இர்பான் சோலங்கியின் (Irfan Solanki) வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.
கான்பூரில் உள்ள இர்பானின் வீட்டில் காலை முதலே அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். நில அபகரிப்பு வழக்கு, போலி ஆதார் அட்டை வழக்கு உட்பட பல்வேறு வழக்குகளின் அடிப்படையில், இந்த சோதனை நடத்தப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், அவருடைய சகோதரர் அர்ஷாத்தின் (Arshad) வீடுகளிலும் சோதனை நடத்தப்படுகிறது. அங்கு பலத்த பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.
சமாஜ்வாதி கட்சி எம்எல்ஏ இம்பான் சோலங்கி கடந்த 2022-ஆம் ஆண்டு, சட்டவிரோத நில ஆக்கிரமிப்பு வழக்கில், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீது நிலத் தகராறு, தீ வைப்பு, விமானப் பயணத்திற்கு போலி ஆதார் அட்டையைப் பயன்படுத்துதல், வங்கதேச குடிமக்களுக்கு போலி இந்தியக் குடியுரிமை வழங்குதல் உட்பட 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக, ராஜ்யசபா தேர்தலில் வாக்களிக்கும் வாய்ப்பை இழந்தார்.