மார்ச் 22-ம் தேதி அன்று, பாரதப் பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வருகை தர உள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் மோடி கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் தமிழகத்திற்கு இரண்டு முறை வந்து சென்றார். மூன்றாவதாக இரண்டு நாள் பயணமாகக் கடந்த 27-ம் தேதி தமிழகம் வருகை தந்தார்.
அப்போது, பல்லடத்தில் நடைபெற்ற என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று பேசினார். அன்றைய தினம் மாலையில் மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.
இதனைத் தொடர்ந்து, மறுநாள் தூத்துக்குடியில் நடந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்ற பிரதமர் மோடி, நிறைவாகத் திருநெல்வேலியில் நடந்த பொதுக் கூட்டத்தில் பங்கேற்றுபேசினார்.
இந்த நிலையில், மார்ச் 22-ம் தேதி அன்று, பாரதப் பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வருகை தர உள்ளார். அப்போது பொதுக் கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார் தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் வருகையொட்டி, தமிழகப் பாஜகவினர் சிறப்பான வரவேற்பு கொடுக்கத் தயாராகி தயாராகி வருகின்றனர்.