புது தில்லியில் நேற்று 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டிற்கான சங்கீத நாடக அகாடமி விருதுகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய குடியரசுத் தலைவர்,
கலை என்பது கலைக்காக மாத்திரமல்ல, சமூக நோக்கமும் கொண்டது. கலைஞர்கள் தங்கள் கலையை சமூக நலனுக்காக பயன்படுத்தியதற்கு இதுபோன்ற பல உதாரணங்கள் வரலாற்றில் உள்ளன என்று கூறினார். கலைஞர்கள் தங்கள் படைப்புகள் மூலம் சமூகத்தை தட்டி எழுப்புவதற்கு பங்களித்து வருகின்றனர். இந்தியாவின் மென்மையான சக்திக்கு இந்திய கலை சிறந்த உதாரணம்.
இன்று மன அழுத்தம், மனச்சோர்வு போன்ற மனநலப் பிரச்சினைகள் அதிகரித்து வருவதாக அவர் தெரிவித்தார். இதற்கு பல காரணங்கள் உள்ளன. ஆன்மீகத்தை விட, பொருள் மகிழ்ச்சியில் அதிக கவனம் செலுத்துவதும் ஒரு காரணம். கலையுடனான தொடர்பு நம்மை ஆக்கப்பூர்வமாக்குகிறது என்று கூறினார். கலை உண்மையைக் கண்டறிய ஒரு வழியை வழங்குகிறது மற்றும் வாழ்க்கைக்கு அர்த்தத்தைத் தருகிறது.
இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒற்றுமை என்ற நூலில் பின்னுவதற்கு கலை மற்றும் கலைஞர்கள் உழைத்துள்ளனர் என்று கூறினார். இதன் மூலம் அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள அடிப்படைக் கடமைகளையும் அவர்கள் நிறைவேற்றியுள்ளனர்.
கடந்த ஏழு தசாப்தங்களாக பல்வேறு கலை வடிவங்களை ஊக்குவித்து வரும் சங்கீத நாடக அகாடமியை அவர் பாராட்டினார். கலை மற்றும் அருவப் பாரம்பரியத்தில் அகாடமி ஆற்றி வரும் பணி மிகவும் முக்கியமானது என்றார்.
அகாடமியின் பெல்லோஷிப் மற்றும் விருதுகள் பெற்ற அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தவர், இசை மற்றும் நாடகத்தின் பல்வேறு வடிவங்கள் மற்றும் வகைகளின் மூலம் இந்திய கலை பாரம்பரியத்தை தொடர்ந்து வளப்படுத்துவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.