பெண்களின் சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் சார்ந்த பங்களிப்புகளுக்கு அங்கீகாரம் மற்றும் மரியாதை வழங்கும் விதமாக உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ம் தேதி சர்வதேச மகளிர் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் மகளிர் தினத்தையொட்டி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள குடியரசு தலைவர்,
அனைவருக்கும் என் மகளிர் தின வாழ்த்துக்கள்! இது நாரி சக்தியைக் கொண்டாடும் ஒரு சந்தர்ப்பம். ஒரு சமூகத்தின் முன்னேற்றம் அதன் பெண்களின் முன்னேற்றத்தைக் கொண்டு அளவிடப்படுகிறது. இந்தியாவின் மகள்கள் விளையாட்டு முதல் அறிவியல் வரை அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கி தேசத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
My greetings to all on Women’s Day! It is an occasion to celebrate Nari Shakti. A society’s progress is measured by the progress made by its women. India’s daughters have been excelling in all walks of life, from sports to science, and making the nation proud. Let us work…
— President of India (@rashtrapatibhvn) March 8, 2024
இளம் பெண்களின் பாதையில் எஞ்சியிருக்கும் தடைகளை நீக்கி, அவர்களுக்கு சிறகுகளை வழங்க நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம், ஏனென்றால் அவர்கள் நாளைய இந்தியாவை வடிவமைப்பார்கள் எனத் தெரிவித்துள்ளார்.