இந்தியாவில் பாஜக ஆட்சி மீண்டும் மலர வேண்டும் என்றும், திருச்சி டாக்டர் ஆர்ஜி ஆனந்த் தலைமையில், திருச்சி உறையூர் கடைவீதி சின்னச் சௌராஷ்டிரா தெருவில் உள்ள, ஸ்ரீ மாணிக்க விநாயகர் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
இந்தியாவில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி மீண்டும் மலர வேண்டும் என்றும், 400 எம்.பிகளுக்கு மேல் பாஜக வெற்றி பெற வேண்டும் என்றும் திருச்சி டாக்டர் ஆர்ஜி ஆனந்த் பல்வேறு கோவில்களில் ஆன்மீக திருப்பணிகள் செய்து வருகிறார்.
இந்த நிலையில், திருச்சி ஸ்ரீ மாணிக்க விநாயகர் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேக விழாவை முன்னின்று பயபக்தியோடு நடத்தினர்.
கும்பாபிஷேகத்திற்காக மங்கல இசை முழங்க முதலாம் கால யாகசாலை பூஜை செய்யப்பட்டு, மகா கணபதி பூஜை, வாஸ்து ஹோம பூஜை உள்ளிட்டவை நடைபெற்றது.
இரண்டாம் கால பூஜையான சூரிய மண்டல பூஜை, அக்னி பூஜை, மகா சாந்தி ஹோமம், 3-ம் கால பூஜையான, விக்ரஹ அஷ்டபந்தன மருந்து சாத்துதலும், 4-ம் கால பூஜையாகப் பிம்பச் சுத்தி, ரக்க்ஷ பந்தனம், தத்வார்ச்சணம் மற்றும் யாக சாலை பூஜை உள்ளிட்வை நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து கும்பாபிஷேகத்தின் முக்கிய நிகழ்வாகக் கோபுர கலசத்திற்கு புண்ணிய நதியில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கலசத்தில் ஊற்றிய புண்ணிய நீரை பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. பின்னர், அருள்மிகு ஸ்ரீ பால விநாயகர் திருக்கோவிலில் சிறப்பு அலங்காரம் செய்து அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.
கும்பாபிஷேக விழாவில் திருச்சி உறையூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.