2024 -ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம் சுமார் 50 லட்சம் ஊழியர்களும், 68 லட்சம் ஓய்வூதியர்களும் பயன் பெறுவார்கள்.
அதேபோல, 2024-2025 -ம் ஆண்டிற்கான சணல் குறைந்தபட்ச ஆதரவு விலை, குவிண்டாலுக்கு ரூ.285 அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், 10,000 கோடி ரூபாய் செலவில் தேசிய அளவிலான இந்தியா ஏஐ நுட்ப மேம்பாட்டிற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.