கர்நாடக மாநிலத்தில் பைக் டாக்சிகளுக்குத் தடை விதித்து அம்மாநில போக்குவரத்துத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில், இரண்டு பெரிய தனியார் நிறுவனங்கள் பைக் டாக்ஸி சேவையில் ஈடுபட்டு வருகின்றனர். மிகவும் குறைந்த வாடகையில் கிடைப்பதால், பொது மக்கள் பைக் டேக்ஸியை ஆர்வமுடன் பயன்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில், பைக் டாக்சிகளுக்குத் தடை விதித்து அம்மாநில போக்குவரத்துத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த ஓராண்டுக்கு முன்பு பெங்களூருவில் பைக் டாக்சியில் சென்ற பெண் ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார்.
இதனால், பெண்கள் பாதுகாப்பு மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களின் கோரிக்கையை ஏற்று பைக் டாக்ஸிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டு மின்சார பைக் டாக்ஸிக்கு பாஜக அரசு அனுமதி அளித்தது. பாஜக அரசு அனுமதி அளித்தது என்ற ஒரே காரணத்திற்காக, பைக் டாக்ஸி அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், பொது மக்கள் பலரும் காங்கிரஸ் அரசுக்கு தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.