புதுக்கோட்டையில் “வளர்ச்சி அடைந்த பாரதம்; மோடியின் உத்திரவாதம்” என்ற பாஜகவின் கருத்துப்பெட்டி வைக்கப்பட்டு பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது.
பொதுமக்களின் தேவைகளை அறிந்து அதற்கேற்ப திட்டங்களை, நடவடிக்கைகளை மேற்கொள்ள பாரத பிரதமரின் அறிவுறுத்தலின்படி இந்தியா முழுவதும் “பாஜகவின் கருத்துப்பெட்டி” அமைக்கப்பட்டு, பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டு வருகிறது.
இதனை செயல் படுத்தும் விதமாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் வழிகாட்டுதலின்படி, திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதுக்கோட்டையில் மாவட்ட தலைவர் விஜயக்குமாரின் தலைமையில் “பாஜகவின் கருத்துப்பெட்டி” வைக்கப்பட்டு பொதுமக்கள் மத்தியில் 10 ஆண்டுகளில் மக்களிடம் பெறப்பட்ட கோரிக்கைகளையயும், யோசனைகளையும், மோடி அரசு நிறைவேற்றியுள்ளது குறித்து பகிர்ந்துகொள்ளப்பட்டது.
இதில் 500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வை மாநில செயற்குழு உறுப்பினரும், திருச்சி நாடாளுமன்ற இணை அமைப்பாளருமான டாக்டர். ஆர்.ஜி. ஆனந்த் ஏற்பாடுசெய்தார்.
பாரத தேசம் மேலும் வளர்ச்சி அடைய மோடி அவர்களுக்கு வாக்களிப்போம், தமிழகத்தின் தேவைகள் முழுவதும் நிறைவேற பாஜக வேட்பாளர்களை தேர்ந்தெடுப்போம் என்று மக்களிடம் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.