கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூரில் நடைபெற்ற தனியார் விளையாட்டு அகாடமி திறப்பு விழாவில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு, விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசளித்தார். விழாவில், வள்ளி முருகன் கலைக்குழுவின் சார்பாக நடைபெற்ற திருக்குறள் கும்மி நிகழ்ச்சி நடைபெற்றது.
கூட்டத்தில் பேசிய அண்ணாமலை,
பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் கேலோ இந்தியா திட்டத்தின் உயரிய நோக்கமான, கிராமப்புறங்களிலும் விளையாட்டு வீரர்களை உருவாக்க வேண்டும் என்பதைச் செயல்படுத்தும் வண்ணம், இந்த விளையாட்டு அகாடமி செயல்படவிருப்பது பெருமைக்குரியது. வள்ளி முருகன் கலைக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். சாதி, மத வேறுபாட்டை விளையாட்டு வைத்து உடைக்க வேண்டும் என தெரிவித்தார்.
நம் நாட்டில் பாரம்பரியம் மிக்க விளையாட்டு வீரர்கள் நாட்டில் உள்ளனர். விளையாடுவதற்கு முழு தகுதி படைத்த நாடு நம் நாடு. மத்திய அரசு சார்பில், விளையாட்டு வீரர்களுக்கு அதிக அளவில் ஊக்க தொகை கொடுத்து விளையாட்டை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தி உள்ளது. இதுவரை இது போன்று விளையாட்டு ஊக்கம் கொடுக்கும் அரசை எங்கும் பார்க்கவில்லை. 2036- ஆம் ஆண்டு ஒலிம்பிக் இந்தியாவில் நடைபெற உள்ளது எனத் தெரிவித்தார்.