நாமக்கல் மக்களவைத் தொகுதி தேர்தல் பணிக்குழு ஆலோசனைக் கூட்டம் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தலைமையில் பாஜக மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. மேலும் நிகழ்ச்சியின் போது, வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டமைக்கும் நோக்கில், மக்களின் மனமறிந்து, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில், 2024 பாராளுமன்றத் தேர்தலுக்கான தமிழக பாஜக, தேர்தல் அறிக்கைக்கான கருத்துகள் பெற்றுக் கொள்ளப்பட்டது.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்,
தமிழகத்தில் ஊழல், கட்டப்பஞ்சாயத்து போன்ற செயல்களில் தி.மு.க. ஈடுபட்டது. ஆனால் தற்போது போதைப்பொருள்கள் கடத்தும் கட்சியாக மாறிவிட்டது. தி.மு.க. முக்கிய நிர்வாகி ரூ.3 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளார்.
குஜராத் வழியாக போதைப் பொருள் கடத்துவதை மத்திய அரசு கண்காணித்தன் மூலமே அவை பிடிப்பட்டு வருகிறது, இண்டிக் கூட்டணியில் உள்ள தலைவர்கள் போதைப் பொருள்கள் கடத்துபவர்களாக உள்ளனர்.
தமிழ்நாட்டில் தி.மு.க. தோல்வி அடைந்த கட்சியாக உள்ளது. கடந்த 3 ஆண்டு கால தி.மு.க. அரசு மக்களுக்கு தேவையான வளர்ச்சி திட்டங்கள், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் போன்ற செய்து கொடுக்கவில்லை.
மதுரையில் இருந்து பெங்களூரு வரை இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில் நாமக்கல்லில் நின்று செல்ல வேண்டுமென ரெயில்வே அமைச்சரிடம் வலியுறுத்துவோம்.
வரும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.,வினர் தீவிரமாக பணியாற்றி தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க வேண்டும். மக்கள் ஆதரவுடன் 3-வது முறையாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதியாகும் என்றார்.
இது குறித்த தனது எக்ஸ் பதிவில்,
பாரதப் பிரதமர் நரேந்திர மோடியால் மத்தியப் பிரதேசம் மாநிலத்திலிருந்து மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு, சங்ககிரி மற்றும் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த, நமது தாமரைச் சொந்தங்கள் மிகுந்த உற்சாகமுடன் வரவேற்பளித்தார்கள்.
மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.@narendramodi ஜி அவர்களால், மத்தியப் பிரதேசம் மாநிலத்திலிருந்து மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு, சங்ககிரி மற்றும் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த, நமது தாமரைச் சொந்தங்கள் மிகுந்த உற்சாகமுடன் வரவேற்பளித்தார்கள்.
2014-ஆம்… pic.twitter.com/07hWGU3Da9
— Dr.L.Murugan (மோடியின் குடும்பம்) (@Murugan_MoS) March 10, 2024
2014-ஆம் ஆண்டிற்கு பிறகு, தேசம் அடைந்திருக்கும் அசுர வளர்ச்சிக்காகவும், ஏழைகள், பெண்கள், விவசாயிகள் மற்றும் இளைஞர் சக்தியை ஊக்குவிப்பதற்கும், நமது அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்டுள்ள நலத்திட்டங்களை, அனைத்து பாமர மக்களிடமும் சென்று சேரும் வண்ணம் உழைப்போம்.
நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பிற்காக நமது அரசாங்கம் எடுத்துள்ள முன்னெடுப்புகளை முழுவதுமாக சென்று சேர்ப்போம். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளையும், நாடு முழுவதும் 400 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியமைப்பதற்கு உறுதியேற்போம்!
வேண்டும் மீண்டும் மோடி! எனத் தெரிவித்துள்ளார்.