போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக்கிற்கு எதிராக அமலாக்கத்றை வழக்குப்பதிவு செய்துள்ளது
ஆஸ்திரேலிய, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு போதைப்பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் முக்கிய வேதிப் பொருட்கள் கடத்தப்படுவதாக டெல்லி போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், மேற்கு டெல்லி கைலாஷ் பார்க் பகுதியில் உள்ள கிடங்கில் சோதனை நடத்தினர்.
அப்போது போதைப் பொருட்கள் தயாரிக்க பயன்படும் 50 கிலோ வேதிப் பொருட்கள் பறிமுதல் செய்தனர். அவற்றின் சர்வதேச மதிப்பு ரு. 2000 கோடி என கூறப்படுகிறது. இதுதொடர்பாக சென்னை முகேஷ், முஜிபுர், விழுப்புரம் அசோக்குமார் ஆகியோரை கைது செய்யப்பட்டனர்.
இதற்கு மூளையாக செயல்பட்ட ஜாபர் சாதிக்கை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் நேற்று கைது செய்தனர். அவனிடம் நடத்திய தீவிர விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே போதைப்பொருள் கடத்தல் கிடைத்த கோடிக்கணக்கான ரூபாய் அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மேலும் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட துறைகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து ஜாபர் சாதிக் மீது அமலாக்கத்துறை பணமோசடி வழக்குப்பதிவு செய்துள்ளது.