நாட்டியாஞ்சலி நடைபெறவிடாமல் தடுத்தது யார்? - அண்ணாமலை கேள்வி!
Mar 19, 2026, 07:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாட்டியாஞ்சலி நடைபெறவிடாமல் தடுத்தது யார்? – அண்ணாமலை கேள்வி!

Murugesan M by Murugesan M
Mar 11, 2024, 10:23 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இருபதாண்டு காலமாக ஆலய வளாகத்தில் நடைபெற்று வந்த நாட்டியாஞ்சலி விழாவினைத் தடை செய்தது முழுக்க முழுக்க திமுக அரசின் இந்து மத விரோதப் போக்கே தவிர, வேறொன்றுமில்லை எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,

தஞ்சாவூர் நாட்டியாஞ்சலி விழாவில், கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்ற காரணம் கூறி, இருபதாண்டுகளாக ஆலய வளாகத்தில் நடைபெறும் நாட்டியாஞ்சலி விழாவுக்கு அனுமதி மறுத்துவிட்டு, தற்போது தனது இந்து மத விரோதப் போக்கு பொதுமக்களுக்குத் தெரிய வந்ததும், இதற்கு சம்பந்தமே இல்லாத தொல்லியல் துறையின் மீது பழி போட்டுத் தப்பித்துக் கொள்ளப்பார்க்கிறது திமுக அரசு.

ஆலய வளாகத்தில் நாட்டியாஞ்சலி விழா நடத்துவதற்கு அனுமதி மறுத்துவிட்டு, கடந்த பல ஆண்டுகளாக இல்லாத வகையில் அவசரகதியில், தொல்லியல் துறைக்கு ஒரு கடிதம் எழுதி, அதற்குக் கிடைத்த பதில் கடிதத்தைக் காரணம் காட்டி, பழியை, தொல்லியல் துறையின் மீது போட்டிருப்பது, திமுக அரசின் வெட்கக்கேடான செயல். நாட்டியாஞ்சலி விழாவுக்கு, தொல்லியல் துறையின் அனுமதி பெறுவது தமிழக அரசின் இந்து சமய அற நிலையத் துறையின் கீழ் வரும் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம்தானே தவிர, தனியார் நிறுவனங்கள் நேரடியாகத் தொல்லியல் துறையிடம் அனுமதி கோருவது இல்லை.

தமிழகம் முழுவதும் ஆலயங்களில், தனியார் நிறுவனங்கள், அறநிலையத் துறையின் உபயதாரராகவே செயல்பட்டுக்கொண்டிருக்கின்றனர். இந்த நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியும், தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில், உபயதாரர்கள் நடத்தும் நிகழ்ச்சிதானே தவிர, தனியார் நிகழ்ச்சி அல்ல.

இதனை மறைத்து, புதிய கதை கூறியிருக்கிறது திமுகவின் உண்மை (?) கண்டறியும் குழு. மத்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் கீழ் வரும் தென்மண்டல கலாச்சார மையம், பிப்ரவரி 14, 2024 தேதியிட்ட கடிதத்தில், நாட்டியாஞ்சலி விழா நடத்துவது, திமுக அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தின் பொறுப்பு என்பதைத் தெளிவாகக் குறிப்பிட்டிருப்பதோடு, நாட்டியாஞ்சலி விழா நடைபெறவிருக்கும் நாட்களில், தங்கள் சார்பில் எந்த நிகழ்ச்சிகளும் ஆலயத்தில் நடைபெறவில்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறது.

ஆனால், திமுக அரசு, 20 ஆண்டுகளாக நடைபெற்று வரும் நாட்டியாஞ்சலி விழாவைத் தடைசெய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு, தனது இந்து மத விரோதச் செயல்பாடுகளுக்குத் துணையாக மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பைத் தவறாகப் பயன்படுத்தியிருக்கிறது.

தஞ்சாவூர் நாட்டியாஞ்சலி விழாவில், கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்ற காரணம் கூறி, இருபதாண்டுகளாக ஆலய வளாகத்தில் நடைபெறும் நாட்டியாஞ்சலி விழாவுக்கு அனுமதி மறுத்துவிட்டு, தற்போது தனது இந்து மத விரோதப் போக்கு பொதுமக்களுக்குத் தெரிய வந்ததும், இதற்கு சம்பந்தமே இல்லாத தொல்லியல்… https://t.co/WKF31I9n2B pic.twitter.com/yhvzhdoIfl

— K.Annamalai (மோடியின் குடும்பம்) (@annamalai_k) March 10, 2024

உலகெங்கும் உள்ள நாட்டியக் கலைஞர்கள், தங்கள் கலைத்திறனால் பெருவுடையாருக்கும், ராஜராஜசோழனுக்கும் மரியாதை செலுத்தும் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி, ஆலய வழிபாடு தொடர்பான நிகழ்ச்சி இல்லை என்று கூறுகிறதா திமுக அரசு? 2010 ஆம் ஆண்டு முதல், கடந்த 13 ஆண்டுகளாக, நாட்டியாஞ்சலி விழா நடைபெற்றபோது, மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் நீதிமன்ற அவமதிப்பாகக் கருதவில்லை என்பதில் இருந்தே தெரிகிறது திமுகவின் உண்மையான நோக்கம்.

இருபதாண்டு காலமாக ஆலய வளாகத்தில் நடைபெற்று வந்த நாட்டியாஞ்சலி விழாவினைத் தடை செய்தது முழுக்க முழுக்க திமுக அரசின் இந்து மத விரோதப் போக்கே தவிர, வேறொன்றுமில்லை.

திமுக அரசின் செய்தி தொடர்பு நிறுவனமாக பணிபுரியும் ஒரு கும்பல் தொடர்ச்சியாக தவறான செய்திகளை பரப்புவதை மட்டுமே முழு நேரமாக வைத்துள்ளனர். இதை திமுக சமூக ஊடகவியலாளர்கள் முழு நேர பணியாக செய்யும் போது இந்த பொய்களை பரப்பும் குழுவின் அவசியம் என்ன என்பதே மக்களின் கேள்வியாக உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

 

Tags: k annamalai
ShareTweetSendShare
Previous Post

சஷக்த் நாரி-விக்சித் பாரத் நிகழ்ச்சியில் பங்கேற்க ஆவலாக உள்ளேன் : பிரதமர் மோடி

Next Post

சபர்மதி ஆசிரம விரிவாக்க திட்டம் : மாஸ்டர் பிளானை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

Related News

அசாம் சட்டப்பேரவை தேர்தல் – 88 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

அமெரிக்காவை போரில் இழுத்து விட்ட இஸ்ரேல் : அமெரிக்க முன்னாள் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குனர் குற்றச்சாட்டு – சிறப்பு கட்டுரை!

கேரளம் சட்டமன்ற தேர்தல் : 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க!

முறைகேடு இல்லாத வெளிப்படையான தேர்தல் நடத்த ஆணையம் உறுதிபூண்டுள்ளது – ஞானேஷ்குமார்

கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய LNG உற்பத்தி மையம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!

விளாத்திகுளம் மாணவியின் உடலை பெற உறவினர்கள் சம்மதம்!

Load More

அண்மைச் செய்திகள்

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது – நயினார் நாகேந்திரன்

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies