டெல்லியில் நடைபெற்ற வலிமையான மகளிர், வளர்ச்சியடைந்த பாரதம் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி 1,000 நமோ ட்ரோன் சகோதரிகளுக்கு ஆளில்லா ட்ரோன்களை வழங்கினார்.
டெல்லி பூசாவில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் வலிமையான பெண்கள் – வளர்ச்சியடைந்த பாரதம் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி நமோ ட்ரோன் சகோதரிகளின் விவசாய ட்ரோன் செயல் விளக்கங்களை பார்வையிட்டார்.
நாடு முழுவதும் 11 வெவ்வேறு இடங்களைச் சேர்ந்த நமோ ட்ரோன் சகோதரிகள் ஒரே நேரத்தில் ட்ரோன் செயல் விளக்கத்தில் பங்கேற்றனர். அப்போது, 1,000 சகோதரிகளுக்கு ஆளில்லா ட்ரோன்களையும் பிரதமர் வழங்கினார்.
இந்த தொலைநோக்குப் பார்வையை மேலும் முன்னெடுத்துச் செல்லும் வகையில், தீன்தயாள் அந்த்யோதயா திட்டம் – தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் ஆதரவுடன் வெற்றியடைந்துள்ள சுய உதவிக் குழு உறுப்பினர்களை பிரதமர் கவுரவித்தார்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் வங்கிகள் அமைக்கும் வங்கி இணைப்பு முகாம்கள் மூலம் சுய உதவிக் குழுக்களுக்கு மானிய வட்டி விகிதத்தில் சுமார் ரூ.8,000 கோடி வங்கிக் கடன்களையும் பிரதமர் மோடி வழங்கினார். சுய உதவிக் குழுக்களுக்கு சுமார் ரூ.2,000 கோடி மூலதன ஆதரவு நிதியையும் பிரதமர் அளித்தார்.