பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தமிழகம் வருகிறார். மார்ச் 15ம் தேதி சேலம், 16ம் தேதி கன்னியாகுமரி, 18ம் தேதி கோவை நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
நாடாளுமன்றத் தேர்தல் தேதி இன்னும் ஒரு சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ளது. இந்த நிலையில் அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. பாஜக தனது முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு உள்ளது. விரைவில் இரண்டாம் கட்ட பட்டியலும் வெளியிடப்பட உள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்ட பணிகளில் தொடங்கி வைத்து வருகிறார். ஒவ்வொரு மாநிலத்திற்கும் சென்று மத்திய அரசு திட்டங்களை மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் பொதுக்கூட்டங்களிலும் கலந்து கொண்டு உள்ளார்.
கடந்த ஒன்றரை மாதங்களில் பிரதமர் நரேந்திர மோடி ஐந்து முறை தமிழகத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது பல்வேறு திட்ட பணிகளில் தொடங்கி வைத்தவர், பாஜக சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டங்களிலும் கலந்து கொண்டார்.
குறிப்பாக பல்லடம் நெல்லை, சென்னை ஆகிய ஊர்களில் பொதுக் கூட்டங்களில் கலந்துகொண்டு தமிழகத்தில் ஆளுங்கட்சியாக உள்ள திமுகவை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
இந்நிலையில் பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தமிழகம் வருகிறார். அந்த வகையில் பிரதமர் மோடி வரும் மார்ச் 15, 16, 18 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டில் பிரச்சாரம் செய்கிறார். 15ஆம் தேதி சேலத்திலும், 16ஆம் தேதி கன்னியாகுமரியிலும், 18ஆம் தேதி கோவையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.