ஜாபர் சாதிக் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்க வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது.
டெல்லியில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, ஜாபர் சாதிக் போதைப் பொருள் கடத்தலில் சம்பாதித்த பணத்தை திரைத்துறை, ஹோட்டல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முதலீடு செய்துள்ளது தெரிய வந்துள்ளதாக கூறினார்.
தமிழகத்தில் ஆளும் திமுக அரசு, திரையுலகினருடன் நெடுங்காலமாக நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளது என்றும், ஜாபர் சாதிக்கிற்கு திமுக தலைமையுடன் நெருங்கிய தொடர்பு உள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
முதல்வர் ஸ்டாலினின் மருமகள் இயக்கிய ‘மங்கை’ திரைப்படத்திற்கு ஜாபர் சாதிக் முழு நிதியுதவி செய்ததாக அவர் குற்றம் சாட்டினார்.ஸ்டாலினும் கம்பெனி (திமுக) அரசை போதை மருந்து விற்பனை அமைப்பாக மாற்றி விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
ஜாபர் சாதிக் தமிழக காவல்துறை இயக்குநரிடம் (டிஜிபி) விருதுகளைப் பெற்றுள்ளான் என்றும் வானதி சீனிவாசன் குற்றம் சாட்டினார்.
எனவே இந்த விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்த வேண்டும் என்றும் வானதி சீனிவாசன் வலியுறுத்தினார்.