தேர்தலுக்காக எந்தத் திட்டமும் செயல்படுத்தவில்லை நாட்டின் வளர்ச்சிக்காக மட்டும்தான் திட்டங்களை செயல்படுத்தி வருவதாக மத்திய அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்
பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் ஒரு லட்சம் கோடி ரூபாயில் 114 திட்டத்திற்கு ஹரியானா மாநிலத்தில் இருந்து காணொளி காட்சி மூலமாக தொடங்கி வைத்தார்.
3200 கோடி ரூபாய் அளவில் தமிழ்நாட்டில் புதிய மேம்பாலங்கள் சாலைகள் அமைப்பதற்கான எட்டு திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.
இதில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ள எட்டு தேசிய நெடுஞ்சாலைகளில் மேம்பாலம் அமைக்கும் திட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டும் நிகழ்வு காணொளி காட்சி மூலமாக சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் ஒளிபரப்பப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கலந்து கொண்டார்.
தர்மபுரி தொப்பூர் சாலையில் செங்குத்தாக மலைப்பகுதியில் சீரமைப்பதற்கு 905 கோடி ஒதுக்கிடப்பட்டு பணிகள் தற்போது தொடங்கி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து ஆந்திரா மாநிலம் எல்லை பகுதி வரை 44 கிலோமீட்டர் தூரத்திற்கு ரூ.1376 கோடி ரூபாயில் இருவழி சாலையாக தற்போது உள்ளது. அதனை நான்கு வழி சாலையாக மேம்படுத்த திட்டம் தொடங்கி உள்ளது.
275 கோடி ரூபாயில் கோவை சிதம்பரம் இடையே உள்ள 48 கிலோமீட்டர் தூரத்திற்கு உள்ள நான்கு வலிச்சாலையினை அகலப்படுத்தும் திட்டமும், கடலூர் விருத்தாச்சலம் இடையில் 44 கிலோ மீட்டர் மேம்பாலம் அமைக்கவும் சாலைகளில் இருபுறமும் அகலப்படுத்தும் பணிகள் 260கோடியில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் கோவை மேட்டுப்பாளையம் இடையில் 10 கிலோமீட்டர் தூரத்திற்கு 20 கோடியில் சாலை பலப்படுத்தும் திட்டமும் , நாகப்பட்டினம் புதுச்சேரி பாலாற்றில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க ரூபாய் 27 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது, கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் 99 கோடி மேம்பாலம் அமைக்கும் திட்டம் இந்த திட்டத்திற்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டியுள்ளார்.
மேடையில் பேசிய மத்திய இணையமைச்சர் எல் முருகன்,
பிரதமரின் கதி சக்தி திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு தேசிய நெடுஞ்சாலைகள் சீரமைக்கப்பட்டதாகவும் புதிய சாலைகள் அமைக்கப்பட்ட இருப்பதாக அவர் குறிப்பிட்டார் .
அடுத்த ஐந்தாண்டு நாட்டின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை தீட்டியும் செயல்படுத்தி இருப்பதாகவும் அதற்கான முன்னோட்டம் தான் இந்தத் திட்டங்களை இன்று துவக்கி வைக்கிறார்.
2014 முதல் தற்போது வரை 10 ஆண்டுகளில் 2500 km தொலைவிற்கு 37 சதவீதம் தேசிய நெடுஞ்சாலைகள் சீரமைக்கப்பட்டும், புதிய சாலைகள் அமைக்கப்பட்ட இருப்பதாக அவர் கூறியுள்ளார் .
எட்டு வழிச்சாலை திட்டம் நான்கு வழி சாலை திட்டம் இருவழிச் சாலை திட்டம் என தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளையும் சீரமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வேகமாக வளர்ச்சியினை தமிழ்நாடு பெற்று இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
கோவையில் பெரியநாயக்கன்பாளையத்தில் நெரிசல் மிகுந்த பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் அமைப்பதற்கு 99 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் இந்த மேம்பாலம் அமைத்தால் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு செல்ல எளிமையாக இருக்கும் , சென்னை மதுரவாயில் துறைமுகம் பறக்கும் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், சென்னை ஐசிஎபில் உள்ள ரயில்வே உற்பத்தி நிலையத்தின் மூலம் உலகம் தரம் வாய்ந்த ரயில்கள் உற்பத்தி செய்யப்பட்டு உள்நாட்டின் தேவையினை பூர்த்தி செய்வது மட்டுமல்லாமல் ரயில்களை வெளிநாட்டிற்கும் ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் .
600 கோடி செலவில் சந்திராயன் திட்டத்தினை செயல்படுத்தி, விஞ்ஞான துறையில் நாம் வளர்ச்சி அடைந்துள்ளோம், உலக அரங்கில் இந்தியாவிற்கு பெரும் வளர்ச்சி பாதையை அடைந்துள்ளது.
நம் நூறாவது சுதந்திர தினத்தை கொண்டாடும் பொழுது இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக இருக்கும், முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் கண்ட கனவு நினைவாகி இருக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய மத்திய இணை அமைச்சர் எல். முருகன்,
இந்தியா முழுவதும் ஒரு லட்சம் கோடியில் 114 சாலைகள் மற்றும் மேம்பாலங்கள் அமைக்கும் திட்டத்தினை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்திருப்பதாகவும், அதில் தமிழ்நாட்டில் மட்டும் எட்டுத் திட்டங்கள் இடம்பெற்று இருப்பதாகும் அதில் ஐந்து திட்டங்கள் தற்போது அடிக்கல் நாட்டியுள்ளார், மூன்று திட்டங்கள் பணிகள் முடிவடைந்து திறந்து வைக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.
மேலும் பேசிய அவர் 3200 கோடி ரூபாய் அளவில் திட்டங்கள் தமிழ்நாட்டில் தற்போது செயல்படுத்தப்பட்டு இருப்பதாகவும், மதுரவாயில் சென்னை துறைமுகம் செல்லும் சாலை திட்டம் அதற்கான அடிக்கல் நாட்டப்பட்டிருப்பதாகும், தர்மபுரி தொப்பூர் இடையிலான நான்கு கிலோமீட்டர் தூரத்திற்கு உயர்மட்ட மேம்பாலம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
2047-இல் வளர்ந்த பாரதம் என்று இலக்கிய அடைவதற்காக பிரதமரின் கதி சக்தி திட்டத்தின் கீழ் தேசிய நெடுஞ்சாலைகள் சீரமைக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பாக தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகள் சீரமைக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
சென்னை மதுரவாயில் துறைமுகம் இடையிலான பறக்கும் சாலை திட்டம் பல ஆண்டுகளாக பல பிரச்சினைகளால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகவும் அதனை மத்திய அமைச்சர் நேரில் ஆய்வு மேற்கொண்ட பிறகு தான் அந்தத் திட்டத்தில் மீண்டும் உயிர்பித்து இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
பிரதமர் தேர்தலுக்காக வேலை செய்யவில்லை நாட்டின் வளர்ச்சிக்காக வேலை செய்வதாகவும் இதனை இன்று பிரதமரை குறிப்பிட்டு பேசியிருந்தார். 11 கோடி பேருக்கு இலவசமாக கேஸ் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது, அதில் 400 ரூபாய் அளவிற்கு விலை குறைக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.
பத்தாண்டுகளில் மூன்று கோடி பேருக்கு பிரதமரின் வீடு கட்டத் திட்டத்தின் கீழ் வீடுகள் வழங்கப்பட்டிருப்பதாகவும் அதற்காக பெண்கள் பெயரில் பட்டாக்கள் வழங்கப்பட்டு இருப்பதாகவும், இலவச கழிவறைகள் கட்டிக் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் , ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் வீட்டிற்கு குடிநீர் வழங்கும் முறை கொண்டு வந்திருப்பதாகவும், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் பெண்களுக்கான 33சதவீத இடஒதுக்கீடு சிறப்பு மசோதா மட்டும்தான் இயற்றப்பட்டு இருப்பதாகவும், மூன்று கோடி மகளிர்களை லட்சாதிபதியாக்கும் டிரோன் திட்டத்தை செயல்படுத்த இருப்பதாகவும், தேர்தலுக்காக இந்த திட்டங்கள் கொண்டு வரவில்லை மகளிர் மேம்பாடு தான் முக்கியம் என்ற அடிப்படையில் திட்டங்கள் கொண்டு வந்திருப்பதாக அவர் தெரிவித்தார்.