வாகனங்கள் மட்டுமல்ல, பொதுமக்களின் வாழ்க்கை கியரையும் இந்த சாலை மாற்றும் : பிரதமர் மோடி
Jun 14, 2026, 01:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வாகனங்கள் மட்டுமல்ல, பொதுமக்களின் வாழ்க்கை கியரையும் இந்த சாலை மாற்றும் : பிரதமர் மோடி

Murugesan M by Murugesan M
Mar 11, 2024, 03:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாஜக அரசின்  வளர்ச்சி பணிகளை பார்த்து இண்டி கூட்டணி கட்சிகள் தூக்கத்தை தொலைத்த விட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

அரியானா மாநிலம் குருகிராமில் நடைபெற்ற நாடு முழுவதும் சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 112 தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு பிரதமர் மோடி  அடிக்கல் நாட்டியும்  தொடங்கியும் வைத்தார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்த நவீன விரைவுச் சாலைக்காக டெல்லி மற்றும் அரியானா மக்களுக்கு பிரதமர்  வாழ்த்து தெரிவித்தார்.

இன்று துவாரகா விரைவுச்சாலையை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த விரைவுச் சாலைக்கு ரூ.9,000 கோடிக்கு மேல் செலவிடப்பட்டுள்ளது. இன்று முதல், டெல்லிக்கும் ஹரியானாவுக்கும் இடையிலான போக்குவரத்து ஒரு புதிய அனுபவமாக இருக்கும்.

இந்த நவீன விரைவுச் சாலை வாகனங்களில் மட்டுமின்றி டெல்லி மக்களின் வாழ்க்கையிலும் கியர்களை மாற்றும் வகையில் செயல்படும்.

ஒரு  காலத்தில் துவாரகா விரைவுச்சாலை அமைக்கப்பட்டுள்ள பகுதிக்கு மக்கள் வருவதை தவிர்த்து வந்தனர்.  டாக்சி ஓட்டுநர்கள் கூட இங்கு வர மறுத்து வந்தனர். இந்த பகுதி முழுவதும் பாதுகாப்பற்றதாக கருதப்பட்டது. ஆனால் இன்று பல பெரிய நிறுவனங்கள் இங்கு தொழில் தொடங்க வருகின்றனர்.

2024 ஆம் ஆண்டு தொடங்கி 3 மாதங்கள் மட்டுமே கடந்த நிலையில், சுமார் 10 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு துவக்கி வைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இது நான் மட்டுமே தொடங்கி வைத்த திட்டங்கள். இது தவிர, பல முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்கள் அடிக்கல் நாட்டி, எண்ணற்ற வளர்ச்சித் திட்டங்களுக்குத் தொடக்கி வைத்துள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

அடுத்த 5 ஆண்டுகளில் வளர்ச்சிப் பணிகள் பல மடங்கு அதிகரிக்கும். பாஜக அரசு செய்து வரும் வளர்ச்சிப் பணிகளால் காங்கிரசார் மற்றும் இண்டியா கூட்டணியினர் தூக்கத்தை இழந்துவிட்டனர். முந்தைய அரசுகள் ஒரு சிறிய திட்டத்தை துவங்கி ஐந்தாண்டுகள் தங்களைத் தாங்களே புகழ்ந்து கொண்டன.  துவாரகா விரைவுச்சாலை தேசிய தலைநகர் பிராந்தியத்தில் பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்தும் என்றும் பிரதமர் மோடி கூறினார்.

நாட்டில் நடைபெற்று வரும் விரைவான உள்கட்டமைப்பு பணிகள், இந்தியாவை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார சக்தியாக மாற்றும் என்று பிரதமர் மோடி மேலும் கூறினார்.

Tags: PM ModiDwarka ExpresswayDelhi NCR.Delhi Gurugram on NH-48
ShareTweetSendShare
Previous Post

நாட்டில் ட்ரோன் தொழில்நுட்பம் மேலும் விரிவுபடுத்தப்படும் : பிரதமர் மோடி உறுதி!

Next Post

தேர்தலுக்காக எந்தத் திட்டமும் செயல்படுத்தவில்லை, நாட்டின் வளர்ச்சிக்காக மட்டும் தான்! – எல். முருகன்

Related News

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள் – முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies