மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இன்றையப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் ஜெயன்ட்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
இந்தியாவில் பெண்களுக்கான மகளிர் பிரீமியர் லீக் ( WPL ) நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், உ.பி. வாரியர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய 5 அணிகள் பங்கேற்றுள்ளன.
இந்த தொடரில் 18-வது போட்டி இன்று டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் உ.பி. வாரியர்ஸ் மற்றும் குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் விளையாடுகிறது.
இதில் டாஸ் வென்ற குஜராத் ஜெயன்ட்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்த போட்டியானது 7:30 மணிக்கு தொடங்கவுள்ளது.
உ.பி. வாரியர்ஸ் அணி :
அலிசா, தீப்தி சர்மா, கிரண், கிரேஸ், பூனம், ஸ்வேதா, சோஃபி எக்லெஸ்டோன், சுல்தானா, சைமா, ராஜேஸ்வரி, தஹ்லியா மெக்ராத்.
குஜராத் ஜெயன்ட்ஸ் அணி :
பெத் முனி, லாரா வோல்வார்ட், கார்ட்னர், தனுஜா, எம்மா, ஹேமலதா, பாரதி, மேகனா, ஷப்னம், மன்னத் காஷ்யப், ஃபோப் லிட்ச்ஃபீல்ட்.