தமிழகத்தில்  ரூ.3, 260 கோடி செலவில் தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுப் பணிகள் : தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!
Sep 9, 2026, 10:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தில்  ரூ.3, 260 கோடி செலவில் தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுப் பணிகள் : தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

Murugesan M by Murugesan M
Mar 11, 2024, 07:06 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழ்நாட்டில் ரூ.3, 260 கோடி செலவில் 157 கி.மீ. தொலைவுக்கு தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுப் பணிகளுக்குப் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த பணிகளைத் தொடங்கி வைத்தார்.

தேசிய நெடுஞ்சாலை எண். 67, புதிய தேசிய நெடுஞ்சாலை 181 ஆகியவற்றில் 10.34 கி.மீ. தூரத்திற்கான சாலைப் பிரிவுகளை பிரதமர் தொடங்கிவைத்தார். இதன் மதிப்பு ரூ.23 கோடியாகும்.  தேசிய நெடுஞ்சாலை 45ஏ-ல், விழுப்புரம்-புதுச்சேரி-நாகப்பட்டினம் சாலையில், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே பழைய மேம்பாலத்திற்கு பதிலாக கட்டப்பட்ட புதிய மேம்பாலத்தையும் அவர் தொடங்கிவைத்தார். இந்தப் பாலம் ரூ.27 கோடி ரூபாய் செலவில் 0.57 கி.மீ. தூரத்திற்கு கட்டப்பட்டது.

நாகப்பட்டினம், கூடலூர்-மைசூர் சாலையில், பெரியநாயக்கன் பாளையம்- கோவைப் புறநகர் பகுதியில் ரூ.99 கோடி செலவில் 1.76 கி.மீ. தூரத்திற்கு கட்டப்பட்ட மேம்பாலத்தையும் பிரதமர் தொடங்கிவைத்தார்.

மேலும் தேசிய நெடுஞ்சாலை 44-ல் தர்மபுரி-சேலம் பிரிவில், 7 கி.மீ. தூரத்திற்கு தோப்பூர் சாலைப்பிரிவை அகலப்படுத்தும் பணிக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். இதன் மதிப்பு ரூ.905 கோடியாகும்.

ரூ.1376 கோடி ரூபாய் செலவில் திருவள்ளூரில் இருந்து, தமிழ்நாடு-ஆந்திரா எல்லைப் பகுதிவரை சென்னை-திருப்பதி தொகுப்பு -1-ல், நான்கு வழிச்சாலையை இணைக்கும் 44 கி.மீ. தூரச் சாலைக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.

இருவழிச்சாலையாக உள்ள தேசிய நெடுஞ்சாலை 81 (கோயம்புத்தூர்-சிதம்பரம்) (பழைய தேசிய நெடுஞ்சாலை எண்.67 நாகப்பட்டினம்-கூடலூர்) அணுகுசாலை வசதியுடன் நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணிக்கும் அவர் அடிக்கல் நாட்டினார். 47.6 கி.மீ. தொலைவுக்கான இந்தச்சாலை ரூ.275  கோடி செலவில் மேம்படுத்தப்படவுள்ளது.

கடலூர்- விருத்தாச்சலம்- சேலம் இடையிலான தேசிய நெடுஞ்சாலை எண்.532-ல் அணுகுசாலை வசதியுடன் இருவழிச்சாலையை, நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்துவதுடன், இந்த சாலையின் பல்வேறு இடங்களில் சாலையின் நடுப்பகுதியில் தடுப்பு அமைத்தல், மழைநீர் வடிகால் கட்டுதல் மற்றும் கூடுதல் பாலப்பணிகள் ரூ.295 கோடி செலவில் மேற்கொள்ளவும் அடிக்கல் நாட்டப்பட்டது.

மதுரை-அச்சம்பத்து-விராட்டிப்பத்து இடையிலான தேசிய நெடுஞ்சாலை எண்.85-ல் 3.53 கி.மீ. தொலைவுக்கு  ரூ.260 கோடி செலவில் புறவழிச்சாலை அமைக்கும் பணிக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.

தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 157 கி.மீ. தொலைவுக்கான தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுப்பணிகள் ரூ.3,260 கோடி செலவில் மேற்கொள்ள அடிக்கல் நாட்டித் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் மெய்நிகர் வடிவில் கலந்துகொண்டார்.

Tags: PM ModiL Murugandelhi
Share
Tweet
SendShare
Previous Post

துவாரகா விரைவுச் சாலையின் சிறப்பம்சங்கள்!

Next Post

WPL : குஜராத் ஜெயன்ட்ஸ் பேட்டிங்!

Related News

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies