திருச்சி எம்.பி தொகுதி, புதுக்கோட்டை மேற்கு மாவட்டம் குன்றாண்டார் கோவில் ஒன்றிய கிள்ளுக்கோட்டை கிராமத்தில் விவசாயிகளுடன் கலந்துரையாடல் நடைபெற்றது.
விவசாயிகளின் முன்னேற்றமே, பாரதப் பிரதமர் மோடியின் உத்தரவாதம் ஆகும். எனவே, பிரதமர் மோடியின் விவசாயம் சார்ந்த நலத்திட்டங்களை விவசாயிகளிடம் கொண்டு சேர்ந்த விவசாய சங்க தலைவர்களுக்கு டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த், கடந்த பல வருடங்களாக சிறப்பு மரியாதை செய்து வருகிறார்.
அந்த வகையில், திருச்சி பாராளுமன்றத்தொகுதிக்கு உட்பட்ட புதுக்கோட்டை மேற்கு மாவட்டம் குன்றாண்டார் கோவில் ஒன்றிய கிள்ளுக்கோட்டை கிராம விவசாயிகளைச் சந்தித்து அவர்களுடன் திருச்சி டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் கலந்துரையாடினார்.
அப்போது, கடந்த 10 ஆண்டுகளில் நாட்டில் விவசாயத்திற்கும், விவசாயிகளின் நலனுக்காகவும் மோடி அரசாங்கம் கொண்டுவந்த நலத்திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து, விவசாயிகளின் தேவைகளைக் கேட்டறிந்தார்.
பின்னர், பிரதமரின் விவசாயத் திட்டங்களைக் கொண்டு சேர்ந்த நிர்வாகிகளுக்கு டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் சிறப்பு மரியாதை செய்து கௌரவித்தார்.