ராஜஸ்தான் சென்றுள்ள பிரதமர் மோடி, பொக்ரானில் நடைபெற்ற முப்படைகளின் போர் பயிற்சி பார்வையிட்டார்.
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஆயுதங்கள், வெடிமருந்துகள், உபகரணங்கள் மற்றும் ஆயுதப் படைகளுக்குள் உள்ள அமைப்புகளை ஒருங்கிணைப்பதை எடுத்துக்காட்டும் வகையில், முப்படைகளின் போர் ஒத்திகை ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் இன்று நடைபெற்றது. இது பாரத் சக்தி என அழைக்கப்படுகிறது.
தேசத்தின் தன்னம்பிக்கை முன்முயற்சியை முன்னிறுத்தி, நாட்டின் வலிமையை வெளிப்படுத்தும் வகையில், உள்நாட்டு ஆயுத அமைப்பு வரிசையை ‘பாரத் சக்தி’ காட்சிப்படுத்தியது.
இதனை 30 வெளிநாட்டு பிரதிநிதிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டார். பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவ தளபதி மனோஜ் பாண்டே உள்ளிட்டோர் போர் பயிற்சியை கண்டு ரசித்தனர்.
LCA தேஜாஸ், மொபைல் ஆண்டி-ட்ரோன் சிஸ்டம், T90 டாங்கிகள், K9 வஜ்ரா மற்றும் பினாகா ராக்கெட்டுகள் உள்ளிட்டவை அதன் போர் திறனை வெளிப்படுத்தின.