CAA நடைமுறைக்கு வந்ததில் முஸ்லீம் சமூகத்திற்கு இதில் எந்த பிரச்சனையும் இருக்காது என்று டெல்லி ஹஜ் கமிட்டி CAA ஐ வரவேற்று தெரிவித்துள்ளது.
CAA நடைமுறைக்கு வந்தது குறித்து செய்தியாளரிடம் பேசிய டெல்லி ஹஜ் கமிட்டி தலைவர் கவுசர் ஜஹான்,
“இதை நான் வரவேற்கிறேன். இது குடியுரிமை வழங்கும் செயல், பறிக்க முடியாது. பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற நமது அண்டை நாடுகளில் உள்ள முஸ்லிம் அல்லாதவர்களின் நிலை நன்றாக இல்லை. அவர்களுக்கு மரியாதையான வாழ்க்கையை வழங்க அரசு விரும்புகிறது, இதில் என்ன பிரச்சனை? முஸ்லிம் சமூகம் இதனால் எந்த பிரச்சனையும் இருக்காது, பீதி அடைய தேவையில்லை” எனத் தெரிவித்தார்.