தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பின் தலைவர் சஞ்சய் தீபக் ராவ் மீது தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
சத்தீஸ்கர், ஒடிசா, தெலுங்கான உள்ளிட்ட மாநிலங்களில் ஒரு சில பகுதிகளில் நக்சலைட்டுகள் மற்றும் மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. நக்சலைட்டுகளை ஒடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த நிலையில், தெலுங்கானா மற்றும் நாட்டின் பிற பகுதிகளில், தீவிரவாதத்தை ஊக்குவித்தது தொடர்பான வழக்கில், தடைசெய்யப்பட்ட இந்திய மாவோயிஸ்ட் அமைப்பின் உயர்மட்ட தலைவர் மீது தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்த மாவோயிஸ்ட் தலைவரான சஞ்சய் தீபக் ராவ், விகாஸ், ஆனந்த் அக்கா அரவிந்த் ஆகியோர் மீது பதிவு செய்த வழக்கு தொடர்பாக, நேற்று ஹைதராபாத் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.