ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுடன், பாஜக மாநில செயற்குழு உறுப்பினரும், திருச்சி பாராளுமன்ற தொகுதி இணை அமைப்பாளருமான டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் சந்திப்பு நடத்தினார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில், “வளர்ச்சி அடைந்த பாரதம், மோடியின் உத்தரவாதம்” என்ற தலைப்பில், மிக அற்புதமாக சந்திப்பு நடைபெற்றது.
இந்த சந்திப்பில், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் பலரும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். அப்போது, பாஜக மாநில செயற்குழு உறுப்பினரும், திருச்சி பாராளுமன்ற தொகுதி இணை அமைப்பாளருமான டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் கலந்துரையாடல் நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய டாக்டர் ஆர்.ஜி. ஆனந்த், பாரத நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு சென்றவர் நமது பிரதமர் மோடி. இன்று உலக நாடுகளுக்கு போட்டியாக இந்தியா ஒரு மாபெரும் வல்லரசு ஆக திகழ்ந்து வருவதற்கும் பிரதமர் மோடியே காரணம்.
மோடி ஆட்சி அமைந்த பிறகு தான் நாட்டில் வறுமை ஒழிந்தது. வேலை இல்லா திண்டாட்டம் குறைந்தது. கருப்புப் பணம் ஒழிக்கப்பட்டது. தீவிரவாதம் அறவே அழிக்கப்பட்டது. குறிப்பாக, இந்திய தேசத்தின் மீதான நம்பிக்கையும், தேசப்பற்றும் பொது மக்களிடம் அதிகரித்துள்ளது.
பொது மக்களுக்கு மேலும் பல சேவைகளை செய்யப் பிரதமர் மோடி தயாராக உள்ளார். எனவே, சேவைகள் பொது மக்களுக்குப் போய் சேர் உங்கள் உதவி தேவை.
உங்களது எண்ணங்களும், கருத்துக்களும் ஆயிரம் பேரின் மனதை மாற்றக்கூடிய திறமை உள்ளது என்பதை நான் நன்கு அறிவேன். காரணம், தனது அரசு பணியை முழுமையாக நிறைவு செய்த உங்களால்தான் பொது மக்களுக்கு நல்ல சேவை முடியும். அரசு ஊழியர்கள் தான் அரசுக்கும் பொது மக்களுக்கும் பாலமாக செயல்படுகின்றனர். எனவே, மக்கள் நலத்திட்டங்கள் பொது மக்களைச் சென்றடைய உங்கள் அன்பும், ஆதரவும் தேவை என்று, டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் தனது உரையை நிறைவு செய்தபோது, பார்வையாளர்கள் மத்தியில் இருந்து வெளிப்பட்ட கரகோஷம் விண்ணைப் பிளந்தது.
பின்னர், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு மரியாதை செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, நாம் அனைவரும் மோடியின் குடும்பம் என்று சொல்லி, குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
புதுக்கோட்டை பொதுமக்கள் சேவையில் டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் தீவிர களப்பணியாற்றி வருவதற்கு பாஜக மூத்த நிர்வாகிகளும், தொண்டர்களும் வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்துள்ளனர்.