சேலம் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர் A. செந்தில் குமார், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர் திரு. A. செந்தில் குமார் அவர்கள், மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நல்லாட்சியாலும், தலைமைப் பண்பாலும் ஈர்க்கப்பட்டு, தனது ஆதரவாளர்களுடன் இன்றைய தினம், பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டார்.
ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர் திரு. A. செந்தில் குமார் அவர்கள், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள் நல்லாட்சியாலும், தலைமைப் பண்பாலும் ஈர்க்கப்பட்டு, தனது ஆதரவாளர்களுடன் இன்றைய தினம், பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டார்.
அஇஅதிமுக… pic.twitter.com/WrFaNi61XU
— K.Annamalai (மோடியின் குடும்பம்) (@annamalai_k) March 12, 2024
அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினராகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும், மக்கள் பணிகளில் நெருக்கமான தொடர்புடைய குடும்பத்தில் இருந்து வந்த A. செந்தில் குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அனைவரையும் வரவேற்று மகிழ்வதோடு, தமிழக மக்கள் எதிர்பார்க்கும் சாமானிய மக்களுக்கான அரசியல் தமிழகத்தில் உருவாக, அவர்கள் ஒவ்வொருவரின் உழைப்பும் நிச்சயம் வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.