சென்னை வள்ளுவர் கோட்டத்தில், தமிழகத்தை போதைப் பொருள் தலைநகராக மாற்றிய DRUG MAFIA திமுகவை கண்டித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய பாஜக மாநிலத் தலைவர்,
“தயாரிப்பாளராக வலம் வந்திருக்கக்கூடிய, ஜாபர் சாதிக்கினுடைய அந்த கூட்டாளிகள் பிடிபட்ட பொழுது, இரண்டாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, அயல்நாடுகளுக்கு போதைப்பொருள் சிக்கியதை பார்த்தோம்.
பிறகு, கடந்த பிப்ரவரி மாதம் பார்த்தால், குஜராத்தில் இருந்து 60 கிலோமீட்டர் தூரத்தில் கடல் பகுதியில், பாகிஸ்தானில் இருந்து வந்த படகில், தமிழகத்திற்கு அனுப்புவதற்காக கொண்டு வரப்பட்ட, கஞ்சா, அதையும் பார்த்தோம்.
மார்ச் மாதம் 1-ஆம் தேதி மதுரையில் டிஆர்ஐ ஒரு பெரிய போதைப்பொருளை பிடித்தது. அதன் பிறகு, இராமநாதபுரத்தினுடைய கடற்கரை பகுதியில் மறுபடியும் போதைப்பொருள் பிடிக்கப்பட்டதைப் பார்த்தோம்.
கடந்த ஒரு மாதக் காலத்தில், தொடர்ச்சியாக தமிழக மக்களை, கஞ்சா கடத்தல் கும்பல் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. ஆனால், நமக்கு தெரியும். எப்பொழுது திமுக ஆட்சிக்கு வந்தார்களோ, அப்பொழுதிருந்தே நாம் அதிர்ச்சியில் இருந்திருக்கின்றோம். இப்பொழுது, ஜாபர் சாதிக் வந்து நமக்கு அதிர்ச்சி கொடுக்கவில்லை.
திமுக வந்த பிறகு, சாதாரணமா முகம் சுளிக்கும் அளவுக்கு தெருவோரத்தில், தேவையில்லாத, யாரோ நடமாடுறாங்களே?. எதுக்கு பள்ளிக்கூடத்துக்கு செல்லக்கூடிய குழந்தைகள் எதற்கு பீர் பாட்டிலோட ஒரு போட்டோ வருது. எல்லாம் திடீர்னு பாக்குறோம்.
ஒரு அரசு பள்ளியினுடைய மாணவச் செல்வங்கள், அங்கு இருக்கக்கூடிய ஆசிரிர்யகள் கீட்ட, தகராறு பண்றாங்க. பள்ளிக்கூடத்துக்கு செல்லக்கூடிய மாணவர்களின் புத்தகப்பையில், தேவையில்லாத விஷயங்கள். இதை எல்லாம் அதிர்ச்சியாக, முப்பத்தி மூன்று மாத காலமாக, பார்த்துக் கொண்டே இருக்கின்றோம்.
போதைப்பொருட்கள் விற்பவர்கள் தனி நபர்கள் கிடையாது. போதைப்பொருட்கள் விற்கக்கூடிய கும்பல் ஒரு அரசியல் கட்சியினுடைய நிழலிலே, தன்னுடைய சாம்ராஜ்ஜியத்தை விரிவுப்படுத்துகிறது. தமிழகத்தினுடைய இளைய சமுதாயத்தை சீரழித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
வரும் 19-ஆம் தேதி வரை, அடுத்த 7 நாட்கள், பாஜக தலைவர்களும், தொண்டர்களும், 15 மணி நேரம் போதைப்பொருளை ஓழிப்பதற்காக, களத்திலே வேலை செய்யப்போகின்றோம். ஒரு நாளைக்கி சராசரியாக 2 மணி நேரம் இருக்கலாம்.
பள்ளி, கல்லூரி மற்றும் பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்து, பொதுமக்கள் மற்றும் இளைஞர்களுக்கு அறிவுரை கொடுங்க. மருத்துவர்கள் மூலம் ஆலோசனை முகாமினை நடத்துங்க என்று பாஜக நிர்வாகிகளுக்கு அண்ணாமலை அறிவுறுத்தல்.
வருகிற 16-ஆம் தேதி 11.00 மணிக்கு பாஜக சார்பில், தமிழகத்தில் சுமார் 50 ஆயிரம் இடத்தில் சிறப்பு பூத் கமிட்டி போட இருக்கின்றோம். இந்த கூட்டம் போதைப்பொருள் ஒழிப்பது குறித்து நடைபெற உள்ளது.
தமிழகத்தில் போதைப்பொருளை ஒழிக்க வேண்டும் என்றால், டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்றும் பாஜக ஆட்சியில் தமிழகத்தில் கள்ளு கடை திறக்கப்படும் எனத் தெரிவித்தார்.