AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உலகின் முதல் மென்பொருள் பொறியாளர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனால் எழுதவும்,கோடிங் உருவாக்கவும் இயலும் என தகவல்.
The tech company Cognition, டெவின் என பெயரிட்ட உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு மென்பொருள் பொறியாளரை அறிமுகம் செய்துள்ளது. இந்த AI மென்பொருள் பொறியாளர் கோடிங், இணையதளம் உருவாக்குதல் போன்ற தொழில்நுட்பத்தை செய்யும் வல்லமை கொண்டது. இதனை மனித பொறியாளர் உடன் உதவிக்கு பணிபுரியும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.
AI தொழில்நுட்பம் மனிதர்கள் வேலையை செய்வதால் அவர்கள் இடத்தை நிரப்பும் நோக்கம் கொண்டு உருவாக்கப்பட்டது அல்ல, அவர்களை வழிநடத்தவும், அவர்களோடு இணைந்து வேலையை எளிதில் செய்ய உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டது. தற்போது டெவின் முன்னணி AI நிறுவங்களின் பொறியியல் நேர்காணலில் தேர்ச்சி பெற்றுள்ளது.
The tech company Cognition உருவாக்கப்பட்ட டெவின் எனும் AI மென்பொறியாளர் அந்நிறுவனம் எக்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “இன்று முதல் AI மென்பொருள் பொறியாளரான டெவின் அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். டெவின் என்பது SWE-பெஞ்ச் குறியீட்டு பெஞ்ச்மார்க்கில் உள்ள புதிய அதிநவீன தொழில்நுட்பமாகும், இது முன்னணி AI நிறுவனங்களின் நடைமுறை பொறியியல் நேர்காணல்களில் வெற்றிகரமாக தேர்ச்சி பெற்றுள்ளது. மேலும் Upwork என்னும் நிறுவனத்தில் பணிபுரிந்து அங்குள்ள மென்பொருள் தொழில்நுட்பத்தின் பிரச்னையை சரி செய்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.