ஹைதராபாத் விடுதலை தினம் அறிவிப்பு உயர்ந்த தியாகங்களைச் செய்த சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் தியாகிகளுக்கு சரியான அஞ்சலியாகும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத் விடுதலைக்காக உயிர் தியாகம் செய்தவர்களை போற்றும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 17-ஆம் தேதி, ‘ஹைதராபாத் விடுதலை தினம்’ கொண்டாடப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் முடிவுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில், ஹைதராபாத் விடுதலை இயக்கத்தின் தியாகிகளின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 17 ஆம் தேதியை ஹைதராபாத் விடுதலை நாளாகக் கொண்டாட பிரதமர் மோடி முடிவு செய்துள்ளதால், இது ஒரு வரலாற்று நாள்.
ஹைதராபாத்தை கொடூரமான நிஜாம் ஆட்சியில் இருந்து விடுவித்து, பாரதத்தின் ஒரு அங்கமாக நிலைத்திருக்க, மிக உயர்ந்த தியாகங்களைச் செய்த சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் தியாகிகளுக்கு இந்த முடிவு சரியான அஞ்சலியாகும் என்று அமித் ஷா கூறியுள்ளார்.