கூகுள் குரோம் தொடர்ந்து புதிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறது, இதுகுறித்து முக்கிய எச்சரிக்கை ஒன்றை இந்திய அரசாங்கம் இந்த மாதம் வெளியிட்டுள்ளது.
சமீபத்திய Chrome பாதுகாப்பு எச்சரிக்கையானது இந்திய கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழுவின் (CERT-In) மூலம் அதிக தீவிரத் தரவரிசையுடன் வந்த தகவல், மில்லியன் கணக்கான Chrome பயனர்களை கவலையடையச் செய்யும்.
CERT-In இன் சமீபத்திய பாதுகாப்பு கூற்றின்படி, “Google Chrome இல் பல பாதிப்புகள் பதிவாகியுள்ளன, இது ரிமோட் அட்டாக்கர் மூலம் தன்னிச்சையான குறியீட்டை செயல்படுத்த அல்லது இலக்கு அமைப்பில் சேவை மறுப்பு (DoS) நிலையை ஏற்படுத்தலாம்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய க்ரோம் பாதுகாப்பு அபாயத்தால் பாதிக்கப்பட்டவர்கள் யார்?
விண்டோஸ் மற்றும் லினக்ஸ் கணினிகளில் சமீபத்திய பதிப்பிற்கு முந்தைய Chrome பதிப்புகளைப் பயன்படுத்துபவர்கள் ஆபத்தில் உள்ளனர் என்று தெளிவாகக் கூறுகிறது.
அதாவது Windows மற்றும் Macக்கான 122.0.6261.111/.112க்கு முந்தைய Google Chrome பதிப்புகள்
– லினக்ஸிற்கான 122.0.6261.111 க்கு முந்தைய Google Chrome பதிப்புகள் பாதிப்பு அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
(– Google Chrome versions prior to 122.0.6261.111/.112 for Windows and Mac – Google Chrome versions prior to 122.0.6261.111 for Linux)
சரி இதனை தவிர்க்க க்ரோம் பயனர்கள் என்ன செய்யவேண்டும் ?
புதிய பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு இரையாவதைத் தவிர்ப்பதற்கான சிறந்த வழி, உங்கள் Windows PC இல் உள்ள Chrome உலாவியை சமீபத்திய பதிப்பிற்கு புதுப்பிப்பதாகும், இது ஏற்கனவே Chrome குழுவால் வெளியிடப்பட்டுள்ளது.